முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிழக்கு உக்ரைனில் 2 நகரங்களை ராணுவம் கைப்பற்றியது

திங்கட்கிழமை, 7 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

கிவ், ஜூலை 8 - உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் தன்னாட்சி உரிமை கோரி ரஷ்ய ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் அது உள்நாட்டு போராக மாறியது. கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெடஸ்க், லுகான்ஸ்க், ஆர்டியோ மிவ்ஸ்க், குருஷ்கிவ்கா உள்ளிட்ட பல நகரங்களை போராட்டக்காரர்கள் பிடித்து தங்கள் வசமாக்கினர்.

எனவே பறிபோன நகரங்களை மீட்க ராணுவம் கடுமையாக போரிட்டு வருகிறது. இந்த நிலையில் போராட்டக்காரர்களிடம் இருந்து ஆர்டியோமிவ்ஸ்க், ட்ருஷ்கிவ்கா ஆகிய 2 நகரங்களை ராணுவம் கைப்பற்றி உள்ளது. இவை தவிர மேலும் பல நகரங்களும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் ராணுவ வசமாகி உள்ளன. இந்த தகவலை உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரோ ஷென்கோ வெப்சைட்டில் அறிவித்துள்ளார்.

அங்கு உக்ரைன் நாட்டின் தேசிய கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கிழக்கு உக்ரைனில் ஸ்லோ வியர்ன்ஸ் நகரை ராணுவம் மீண்டும் பிடித்தது. அதை தொடர்ந்து தற்போது இந்த நகரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆனால் கிழக்கு உக்ரைனில் தலைநகர் டொனெஸ்ட்க், லூகர்ன்ஸ் நகரங்கள் போராட்டக்காரர்கள் வசமே உள்ளது. டொனெஸ்ட்க் நகரில் போராட்டக்காரர்கள் மீண்டும் கூடி பேரணி நடத்தினர். சிறை துறையின் தலைமையகத்தை தாக்கி ஆயுதங்களை கொள்ளையடிக்க முயற்சி செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago