முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கெயில் நிறுவனதுக்கு இடைக்காலத்தடை நீட்டிப்பு

திங்கட்கிழமை, 7 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

டெல்லி: ஜூலை 8 - தமிழகத்தில் விளை நிலம் வழியே கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்களை பதிக்க விதிக்கப்பட்டு இருந்த இடைக்காலத்தடையை சுப்ரீம் கோர்ட் நீட்டித்துள்ளது.

கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு தமிழகத்தின் மேற்கு மாவட்ட விளைநிலம் வழியே கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்களை பதிக்க முயற்சித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பான வழக்கும் சுப்ரீம் கோர்ட் டில் நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் விளைநிலத்தில் எரிவாயு குழாய் பதிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்த நிலையில் வழக்கு விசாரணை நேற்று மீண்டும் நடைபெற்றது. அப்போது இடைக்காலத்தடையை 3 வாரத்துக்கு நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் மத்திய அரசின் மனுவுக்கு விளக்கம் தர தமிழக அரசுக்கு 3 வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!