முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய டிசைன்களில் பட்டுப் புடவைகள்: அமைச்சர் தகவல்

திங்கட்கிழமை, 7 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஜூலை.8 - புதிய டிசைன்களில் மக்களை கவரும் வண்ணம் பட்டுப்புடவைகள் (ம) கதர் ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்திட வேண்டுமென அமைச்சர் டி.பி.பூனாட்சி அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

கதர் (ம) கிராமத் தொழில் துறை அமைச்சர் டி.பி.பூனாட்சி 7.7.2014 அன்று கதர் (ம) கிராமத் தொழில் வாரியத்தின் கதர் மற்றும் கிராமப்பொருட்கள் உற்பத்தி (ம) விற்பனை, கேட்பு வசூல் நிலுவை, பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்த முன்னேற்றம் ஆகியன குறித்து விரிவான ஆய்வினை மேற்கொண்டார்.

மேலும் எதிர்நோக்கி வரும் பண்டிகை காலங்களான ரம்ஜான், தீபாவளி, கிருஸ்துமஸ், பொங்கல் திருநாள் ஆகிய காலங்களில் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு புதிய டிசைன்களில் மக்களை கவரும் வண்ணம் பட்டுப்புடவைகள் (ம) கதர் ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்திட வேண்டுமென அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.

இக்கூட்டத்தில் ஹர்மந்தர் சிங், அரசு முதன்மைச் செயலாளர் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை சென்னை -9, கா. பாலச்சந்திரன், தலைமைச் செயல் அலுவலர், கதர் கிராமத் தொழில்கள் வாரியம் சென்னை -108, வி.ராமு, நிதிநிலை ஆலோசகர் மற்றும் தலைமைக் கணக்கு அலுவலர், வாரிய அலுவலர்கள், மண்டல துணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட உதவி இயக்குநர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!