முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிக வருமானம்: மானிய விலை சிலிண்டர் ரத்தாகிறது

செவ்வாய்க்கிழமை, 8 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை.09 - அதிக வருமானம் உள்ளவர்களுக்கு மானிய விலை சிலிண்டரை ரத்து செய்வது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

மத்திய அரசு தற்போது அனைத்து வருவாய் பிரிவினருக்கும் மானிய விலையில் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது. 12 சிலிண்டர்களுக்கும் அதிகமாக கூடுதல் சிலிண்டர்கள் தேவப்படுவோர்கள் மானியம் அல்லாத முழு விலையில் சிலிண்டர்கள் வினியோகிக்கப்படுகிறது. இதேபோல் மண்ணெணய், பெட்ரோல், டீசல் போன்றவற்றிக்கும் மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இதனால் மத்திய அரசுக்கு நிதிசுமை ஏற்படுகிறது. கேஸ் சிலிண்டர் மற்றும் மண்ணெணய், டீசலுக்கும் ஆண்டுக்கு 1,15,548 கோடி அளவுக்கு மானியம் வழங்குகிறது. இதில் கேஸ் சிலிண்டருக்கு ரூ.50,324 கோடியும் மண்ணெணய்க்கு ரூ.29,448 கோடியும் டீசலுக்கு ரூ.35,736 கோடியும் மானியம் வழங்ப்படுகிறது என்றாலும் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகின்றனர். இதை எப்படி சரிகட்டலாம் என்று மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

கேஸ் சிலிண்டர் மானியத்தை குறைத்து விலையை ரூ.250 வரை உயர்த்தலாம் என்று எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்தனர். ஆனால், இது நடுத்தர மற்றும் ஏழைகளை பாதிக்கும் என்பதால் கேஸ் விலையை உயர்த்த மத்திய அரசு தயங்குகிறது. எனவே அனைத்து வருவாய் பிரிவினருக்கும் மானிய விலையில் சிலிண்டர் வழங்கும் திட்டத்தில் மாற்றம் செய்து உயர் வருவாய் பிரிவு மற்றும் அதிக வருமானம் உள்ளவர்களுக்கு மானிய விலை சிலிண்டர்களை ரத்து செய்யலாம் என்று மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. அவர்களுக்கு மானியம் இல்லாத முழுவிலையுடன் கூடிய சிலிண்டர்களை மட்டுமே சப்ளை செய்ய ஆலோசிக்க படுகிறது. இதன் மூலம் மானிய சுமையை ஒரளவுக்கு குறைக்க முடியும் என்று யோசனை தெரிவிக்கப்படுகிறது. டீசல் மானியத்தை குறைத்து விலையை அதிகரித்தால் அது விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் என்பதால் அதுபற்றி ஆலோசனை நடத்தப்படவில்லை.

இதே போல் மண்ணெணய் விலையை உய்ரத்திவிட்டு அதற்கான மானியத்தை பயணாளிகளுக்கு நேரடியாக வழங்கலாமா என்றும் பரிசீலிக்கப்படுகிறது. இதன்மூலம் மண்ணெணய் பதுக்கல் மற்றும் கள்ளசந்தையில் விற்பனை செய்வது கட்டுப்படுத்தப்படும் என்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!