முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நாளை தொடக்கம்

செவ்வாய்க்கிழமை, 8 ஜூலை 2014      விளையாட்டு
Image Unavailable

 

நாட்டிங்காம், ஜூலை.9 - இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிகளில் டிஆர்எஸ் எனப்படும், நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் நடைமுறை இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.ஆர்.எஸ். முறை சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டாலும், இந்திய கிரிக்கெட் வாரியம் எப்போதுமே அதை ஏற்றுக்கொண்டது கிடையாது. அதே நேரம் ஆசஷ் உள்ளிட்ட பல கிரிக்கெட் தொடர்களில் இந்த நடைமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இன்று தொடங்க உள்ள, இந்தியா-இங்கிலாந்து நடுவேயான டெஸ்ட் போட்டித்தொடருக்கும் இதுபோன்ற டிஆர்எஸ் நடைமுறையை பயன்படுத்த வேண்டும் என்பது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையாக இருந்தது. ஆனால் இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்தது.

இறுதியில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. எனவே இந்த போட்டித்தொடரில் டி.ஆர்.எஸ் நடைமுறை இருக்காது. மைதானத்தில் உள்ள நடுவர்கள் எடுக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய முடியாது. இரு நாடுகள் நடுவேயான போட்டி என்பதால்தான் டி.ஆர்.எஸ். நடைமுறை கிடையாது என்றும், ஐசிசி தொடர்களில் அந்த முறை செயல்படுத்தப்படும் என்றும் ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது.

டிரென்ட் பிரிட்ஜ்ஜில் நாளை தொடங்க உள்ள இவ்விரு அணிகள் நடுவேயான போட்டிக்கு நடுவர்களாக குமார் தர்மசேனா, புரூஸ் ஆக்சன்போர்ட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்