Idhayam Matrimony

பிரேசில் மோசமான தோல்வி: ரசிகர்கள் கண்ணீர்

புதன்கிழமை, 9 ஜூலை 2014      விளையாட்டு
Image Unavailable

 

பெலோஹொரி, ஜூலை 10 - கால்பந்து விளையாட்டை தங்கள் உயிர் மூச்சாக நினைப்பவர்கள் பிரேசில் நாட்டை சேர்ந்தவர்கள். அதற்கு ஏற்ற வகையில் அந்நாட்டு அணியும் 5 முறை உலகக் கோப்பையை வென்று இருந்தது.

சொந்த மண்ணில் நடைபெறும் போட்டியில் பிரேசில் அணி மிகவும் சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்றும் என்று அந்நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில் ஜெர்மனி அணிக்கு எதிரான அரையிறுதியில் மோசமாக விளையாடி வரலாறு காணாத தோல்வியை தழுவியது.

மிகவும் முக்கியமான அரையிறுதியில் அந்த அணி 1_7 என்ற கோல் கணக்கில் தோற்றது. பிரேசில் கால்பந்து வரலாற்றில் இதுதான் மோசமான தோல்வியாகும். 1920ம் ஆண்டு உருகுவே அணிக்கு எதிராக 0_6 என்ற கணக்கில் தோற்று இருந்தது. அதன் பிறகு கால்பந்து ஜாம்பவான் என்று அழைக்கப்படும் பிரேசில் அணி இப்படி ஒரு மோசமான தோல்வியை தழுவுவது இப்போதுதான்.

போட்டியை நேரில் பார்த்த பிரேசில் ரசிகர்களும் டெலிவிசனில் பார்த்த ரசிகர்களும் இந்த தோல்வியால் கண்ணீர் விட்டனர். ஜெர்மனி ஒவ்வொரு கோல் விழுந்த போதும் ரசிகர்கள், ரசிகைகள் கண்ணீருடன் காணப்பட்டனர். பிரேசில் முழுவதும் சோகமே காணப்பட்டது. போட்டி முடிந்ததும் பிரேசில் வீரர்களும் மைதானத்தில் கண்ணீர் விட்டு கதறினர். அவர்களுக்கு வெற்றி பெற்ற ஜெர்மனி வீரர்கள் ஆறுதல் கூறினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்