முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.வி. பிக்சர்டியூப்புக்கு சுங்கவரி குறைப்பு

வியாழக்கிழமை, 10 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

 

புதுடெல்லி, ஜூலை- 11 - சோப்புகள் தயாரிப்புக்கான வரி நீக்கப்படுகிறது. இதனால் சோப் விலைகள் குறையும்.

கொழுப்பு அமிலம் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு சுங்க வரி ரத்து செய்யப்படுகிறது. புதிய திட்டங்கள் தொடங்குபவர்கள் முதல் 10 ஆண்டுகள் வரி கட்ட வேண்டியதில்லை. வரி செலுத்துபவர்களின் நலனை கருத்தில் கொண்டு 60 சேவை மையங்கள் திறக்கப்படும். பெட்ரோ கெமிக்கல் பொருட்கள் மீதான சுங்க வரி 5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்படும்.

தொலைதொடர்பு கருவிகளுக்கான இறக்குமதி வரி 10 சதவீதம் குறைக்கப்படுகிறது. டி.விக்களில் பயன்படுத்தப்படும் பிக்சர்டியூப் மீதான சுங்கவரி குறைக்கப்படுகிறது. இதனால் தொலைக்காட்சி பெட்டிகள் விலை குறையும். நேரடி வரி விதிப்பு திட்டங்கள் மறுபரிசீலனை செய்யப்படும். மின்னணு சாதனங்கள் மீதான வரிகள் குறைக்கப்படுகிறது. இதனால் கம்ப்யூட்டர்கள் விலை குறையும்.

காற்றாலை, சூரிய மின் உற்பத்தி கருவிகளுக்கான வரி குறைக்கப்படுகிறது. இது மின் உற்பத்தியை அதிகரிக்க வழி வகை செய்யும். எவர்சில்வர் பொருட்களுக்கான வரி விதிப்பு 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. எனவே எவர்சில்வர் பொருட்கள் விலை உயரும். வைரம், தங்கத்தின் கற்கள் மீதான வரி குறைகிறது. எனவே இவற்றின் விலை குறையும்.

ரூ. 25 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் நிறுவனங்களை ஊக்கப்படுத்த பல்வேறு சலுகைகள் வழங்கப்படும். செருப்பு தயாரிப்பு மீதான வரி 6 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதனால் காலணிகள் விலை குறையும். இரும்பு தாது பொருட்கள் மீதான வரி 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. சிகரெட் தயாரிப்பு புகையிலை மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதனால் சிகரெட் வகைகளின் விலை கணிசமாக உயரும்.

பான் மசாலா, குட்கா போன்றவற்றுக்கும் 16 சதவீதமாக வரி உயர்த்தப்படுகிறது. இதனால் பான் மசாலா, குட்கா விலையும் அதிகமாக உயரும். சிகரெட் மீதான மொத்த வரி 72 சதவீதமாக உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது. விளையாட்டு பொருட்கள் மீதான வரி குறைக்கப்படுகிறது. எனவே விளையாட்டு பொருட்கள் விலை குறையும். சோடா பானங்களுக்கு கூடுதலாக 5 சதவீத உற்பத்தி வரி விதிக்கப்படுகிறது. இதனால் குளிர்பானங்கள் விலை உயரும்.

ஆன்லைன் விளம்பரங்கள் மீதான வரி அதிகரிக்கப்படுகிறது. அச்சு ஊடகங்களுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. பட்ஜெட்டில் மொத்த திட்ட செலவு ரூ. 5,75,000 கோடியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை 2.9 சதவீதமாக உள்ளது. நேரடி வரி விதிப்பு சலுகைகள் நிறைய வழங்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு ரூ. 22 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்