முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்வையற்றோருக்காக பிரெய்லி ரூபாய் அறிமுகம்

வியாழக்கிழமை, 10 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை 11 - பார்வையற்றோர் பயன்பெறும் வகையில் அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் பிரெய்லி முறை அறிமுகம் செய்யப்படும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் மேம்பாட்டுக்காக ரூ. 50,047 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் 24 மணி நேர மின்வசதி செய்து கொடுக்கப்படும். 2019ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் எல்லா கிராமங்களிலும் வீடுகளிலும், கழிவறை வசதி ஏற்படுத்தப்படும். இதன் மூலம் 2019ம் ஆண்டுக்குள் முழு சுகாதாரத்தை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பஸ், ரயில்களில் பயணம் செய்யும் பெண்கள் பாதுகாப்புக்கு தனி கவனம் செலுத்தப்படும். இதற்காக ரூ. 150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு திறமையை மேம்படுத்த தனி துறை ஏற்படுத்தப்படும். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 4 சதவீத வட்டியில் கடன்கள் வழங்கப்படும். இது முதலில் 100 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்க தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 14,389 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ. 8 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்துக்கு ரூ. 3600 கோடி ஒதுக்கப்படுகிறது. சிறுதொழில் முனைவோரை ஊக்குவிக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் ரூ. 8 லட்சம் கோடி விவசாய கடன்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு புத்துயிர் அளிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

நாடெங்கும் 7 புதிய தொழில் நகரங்கள் உருவாக்கப்படும். தமிழ்நாடு, உத்தரபிரதேசம் உட்பட 6 மாநிலங்களில் ஜவுளி பூங்கா ஏற்படுத்தப்படும். சுற்றுலா துறையிலும் 49 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்படும். பொருட்கள் வரி, சேவை வரிக்கான அறிவிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும். தமிழ்நாடு , ராஜஸ்தானில் சூரிய மின்சக்தி திட்டம் தொடங்க ரூ. 500 கோடி ஒதுக்கப்படுகிறது. புதிய விமான நிலையங்களை மேம்படுத்த சிறப்பு திட்டங்கள் வெளியிடப்படும். பொதுத்துறை நிறுவனங்கள் நடப்பாண்டு ரூ. 2 லட்சத்து 47 ஆயிரத்து 941 கோடி முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்