முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்ஜெட் முக்கிய அம்சங்கள்..

வியாழக்கிழமை, 10 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை-11 - * கிசான் விகாஸ் சேமிப்பு பத்திரம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்.

* பாசன வசதிகளை மேம்படுத்த ரூ. 1000 கோடி ஒதுக்கீடு.

* 2019ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை வசதி செய்து தரப்படும்.

* குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை நிறுவ ரூ. 200 கோடி ஒதுக்கீடு.

* நாடு முழுவதும் புதிய திட்டங்களை செயல்படுத்த ரூ. 2.50 லட்சம் கோடி ஒதுக்கீடு.

* நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரம் மின்சாரம் வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது.

* நிலம் இல்லாத 5 லட்சம் விவசாயிகளுக்கு நபார்டு வங்கி மூலம் கடனுதவி.

* கிராமங்களில் மின்சார வசதியை மேம்படுத்த ரூ. 500 கோடி ஒதுக்கீடு.

* மூத்த குடிமக்களின் உரிமம் கோரப்படாத பி.எப். நிதியை முறைப்படுத்த குழு அமைப்பு.

* இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படும்.

* இந்த ஆண்டில் 11,000 கோடி செலவில் 16 புதிய துறைமுகங்கள் உருவாக்கப்படும்.

* டெல்லியை போல் சென்னையில் எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்படுத்தப்படும்.

* பார்வையற்றோர் நலன் கருதி ரூபாய் நோட்டுகளில் பிரெய்லி எழுத்து அறிமுகப்படுத்தப்படும்.

* பொது போக்குவரத்தில் பெண்கள் பாதுகாப்புக்கு ரூ. 150 கோடி ஒதுக்கீடு.

* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 4 சதவீத வட்டியில் கடன் வசதி நீடிப்பு.

* நாடு முழுவதும் 12 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் இந்த ஆண்டு தொடங்கப்படும்.

* படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்.

* சென்னை மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவம் மற்றும் காசநோய் சிகிச்சை மையங்கள் உருவாக்கப்படும்.

* நாடு முழுவதும் புதிதாக 5 ஐ.ஐ.டி, 5 ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள்.

* ஒரு குடும்பத்துக்கு 2 வங்கி கணக்குகள் தொடங்கப்படும்.

* சமுதாய வானொலி திட்டத்துக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு.

* பிராட்பேண்ட் மூலம் கிராமங்கள் இணைக்கப்படும்.

* புதிதாக 4 எய்ம்ஸ் மருத்துவமனைகள் ரூ. 500 கோடியில் மராட்டியம், ஆந்திரம், மேற்குவங்கம், உ.பியில் அமைக்கப்படும்.

* ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு ரூ. 33,000 கோடி ஒதுக்கீடு.

* லக்னோ, ஆமதாபாத், மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தலா ரூ. 100 கோடி ஒதுக்கீடு.

* காப்பீட்டு திட்டங்களில் 49 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி.

* பி.பி.எப். ஆண்டு திட்ட வரம்பு ரூ. ஒரு லட்சத்தில் இருந்து ரூ. ஒன்றரை லட்சமாக உயர்வு.

* வங்கிகளுக்கு ரூ. 2.4 லட்சம் கோடி நிதி உதவி.

* காஞ்சிபுரம், மதுரா உள்ளிட்ட இடங்களில் தேசிய பாரம்பரிய சின்னங்களை பராமரிக்க ரூ. 200 கோடி.

* ரூ. 7,060 கோடி செலவில் 100 புதிய நவீன நகரங்கள் உருவாக்கப்படும்.

* 6 மாதங்களில் 9 விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்.

* சுற்றுலாவை விரைவுபடுத்த மின்னணு விசா முறை அறிமுகப்படுத்தப்படும்.

* ஆந்திரா, ராஜஸ்தான் வேளாண் பல்கலைக்கழகங்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்