முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்திரபாபு நாயுடு ஆட்சி பாதியில் கவிழ்ந்து விடுமாம்

வியாழக்கிழமை, 10 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

நகரி, ஜூலை 11 - ஆந்திர மாநிலம் நகரி நகரசபை தலைவராக சாந்தகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவர் தலைவராக நகரசபை அலுவலகத்தில் பதவியேற்று கொண்டார். விழாவில் பங்கேற்ற நகரி தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் வெற்றி ஊர்வலம் நடந்தது. மணிக்கூண்டு அருகில் உள்ள ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி சிலைக்கு இருவரும் மாலை அணிவித்தனர். அப்போது நடிகை ரோஜா பேசியதாவது,

நகரி தொகுதியிலும் நகரசபையிலும் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். பெண்கள் தனது திறமையால் நல்ல நிர்வாகத்தை தர முடியும். ஒரு குடும்பத்தில் ஆண்கள் சம்பாதித்தாலும் பெண்கள்தான் குடும்பத்தை நிர்வகிக்கிறார்கள். அதே போல நகரி மக்களுக்கு பெண்களாகிய நாங்கள் நல்ல சேவைகளை செய்வோம்.

தெலுங்குதேச தலைவர் சந்திரபாபு நாயுடு அமல்படுத்த முடியாத வாக்குறுதிகளை சொல்லி ஆட்சியை பிடித்து உள்ளார். விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வேன் என்றார். ஆனால் சொன்னபடி செய்யவில்லை. இதனால் விவசாயிகள் வட்டி கட்ட முடியாமல் உள்ளனர். விவசாயிகள் மீது சந்திரபாபு நாயுடுவுக்கு அக்கறை இல்லை. கடனை தள்ளுபடி செய்யாமல் அவர்களது வாழ்க்கையை நாசமாக்கி பாதாளத்தில் தள்ளி விட்டார். அவரது எம்.எல்.ஏக்கள் மக்களை சந்திக்க முடியாத நிலை உள்ளது. வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் அவர்களது எம்.எல்.ஏவின் சட்டையை பிடித்து கேட்க மக்கள் தயாராகி வருகிறார்கள். இதே நிலை நீடித்தால் சந்திரபாபு நாயுடு ஆட்சி கடைசி வரை நீடிக்காது. ஆட்சி பாதியில் கவிழ்ந்து விடும். இவ்வாறு நடிகை ரோஜா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago