முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோசமான தோல்வி எதிரொலி: பிரேசிலில் கலவரம்

வியாழக்கிழமை, 10 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

சாபாவ்லோ, ஜூலை 11 - உலக கோப்பை போட்டியை நடத்திய பிரேசில் அணி அரையிறுதியில் 1 - 7 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் மோசமாக தோற்றது. பிரேசில் கால்பந்து வரலாற்றில் இது மிகவும் மோசமான தோல்வியாகும்.

இதனால் அந்நாடே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. ரசிகர்கள், ரசிகைகள் கண்ணீர் விட்டு கதறினர். அந்நாட்டு பத்திரிகைகள் மிகவும் அவமானம் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு பிரேசில் வீரர்களை கடுமையாக விமர்சனம் செய்தன.

இந்த தோல்வியால் பிரேசில் கால்பந்து ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். சாபாவ்லோ நகரில் பயணிகள் பஸ்களை தீ வைத்து எரித்தனர். 20 பஸ்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதில் 3 பஸ்கள் முழுமையாக எரிந்து விட்டன. மேலும் பல பஸ்கள் கல்வீச்சில் சேதமடைந்தன. இந்த சம்பவத்தால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

அர்ஜென்டினா _ நெதர்லாந்து அணிகள் சாபாவ்லோவில் நேற்று முன்தினம் மோதிய ஆட்டத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது. மேலும் பிரேசிலின் முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பஸ் எரிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்