முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானம் தாங்கி போர்க்கப்பலை கட்டி முடிக்க ரூ.19,000 கோடி

வியாழக்கிழமை, 10 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை.11 - கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் பிரமாணடமான விமானம் தாங்கி போர்க்கப்பலைக் கட்டி முடிப்பதற்கு ரூ.19,000 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவைத் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாகிவரும் இந்தக் கப்பலின் கட்டுமானப் பணியை முடிப்பதற்கான அனுமதியும் நீண்டகாலமாக நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்ற போது மேற்கண்ட நிதி ஒதுக்கீட்டில் இப்பணியை முடிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. கேரள மாநில கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் 40,000 டன் எடையில் இந்த போர்க்கப்பல் கடந்த 2006 நவம்பர் மாதம் முதல் உருவாக்கப்பட்டு வருகிறது. இக்கப்பல் கட்டுமானத்துக்கு ஏற்கெனவே அரசு 3,500 கோடியை ஒதுக்கியிருந்தது.

இக்கப்பல் வரும் 2016-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு, அதே ஆண்டில் பல்வேறு சோதனைகளுக்கு உள்படுத்தப்படும். அதைத் தொடர்ந்து 2018-ஆம் ஆண்டில் இறுதியில் கடற்படையில் இணைக்கப்படும். இந்தக் கப்பல் செயல்பாட்டுக்கு வந்ததும் அதில் மிக்-29கே, இலகு ரக, தேஜஸ்ரக விமானங்கள் மற்றும் மாமோவ் 31 ரக ஹெலிகாப்டர்கள் போன்றவற்றை நிறுத்தி வைக்க முடியும். இத்தகைய பிரமாண்ட போர்க்கப்பலை உருவாக்க இந்தியா எடுக்கும் முதல் முயற்சி இதுவாகும்.

இதனிடையே, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, கேரளம் மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 676 கி.மீ. தூரத்துக்கு 4 வழி மற்றும் 6 வழி நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்வதற்கு ரூ.13,987 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago