முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

24 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா

வியாழக்கிழமை, 10 ஜூலை 2014      விளையாட்டு
Image Unavailable

 

சா பாலோ, ஜூலை.11 - உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா நெத்ரலாந்தை 4-2 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஏற்கெனவே முடிந்து முதல் அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனி பிரேசிலை 7-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த போட்டியில் மிகுந்த எதிர்பார்ப்பு வைத்திருந்த அர்ஜென்டினாவின் நட்சத்திர ஆட்டக்காரரான லயனல் மெஸ்ஸி ஏதாவது மேஜிக் செய்து கோல் போட மாட்டாரா என்று ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் அவர் கோலே அடிக்கவில்லை. அதே போல் நெதர்லாந்தின் நட்சத்திர ஆட்டக்காரரான ராபின் வான் பெர்ஸி மீதும் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.. ஆனால் அவரும் கோல் அடிக்கவில்லை. இந்த போட்டியில் டிபெண்டர்கள் திறமையாக விளையாடினார்கள். அவர்கள் மெஸ்ஸி மற்றும் நெதர்லாந்தின் பெர்ஸி, ஆர்யன் ராபென் ஆகியோரிடம் பந்து கிடைக்காமல் பார்த்துக் கொண்டனர்.

அரையிறுதி போட்டியேன்பதால் ரசிகர்கள் இந்த போட்டியில் அதிக ஆர்வத்தோடு கண்டனர். ஆனால், இந்த ஆட்டத்தின் முழு நேரம் முடியும் வரை இரண்டு அணிகளுமே எந்த கோலும் அடிக்காமல் திணரின. ஆட்ட நேரம் முடிந்த பிறகு எக்ஸ்டரா டைம் என்று மேலும் 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்தையும் இரண்டு அணி வீரர்களுமே பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதிலும் கோல் எதுவும் விலவில்லை.

எக்ஸ்ட்ரா டைமிலும் கோல் எதுவும் போடாததால் பெனால்ட்டி ஷூட் மூலம் வெற்றியை நிர்ணையிக்க முடிவு செய்யப்பட்டது. பெனால்ட்டி ஷூட்டில் அர்ஜென்டினா தரப்பில் மெஸ்ஸி, கரோ, செர்ஜியோ அக்விரோ மாற்றும் மாக்சி ரோட்ரிகஸ் ஆகியோர் சலா ஒரு கோல்கள் போட்டனர். ஆனால் நெதர்லாந்து தரப்பில் ஆர்யன் ராபென் மற்றும் டிரிக் குயிட் ஆகியோர் மட்டும் தான் கோல் போட்டனர்.

இதனால் அர்ஜென்டினா நெதர்லாந்தை 4-2 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டியில் ஜெர்மனியுடன் மோதுகிறது. இதற்கு முன்பு அர்ஜென்டினா கடைசியாக 1990-ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதையடுத்து 24 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்