முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அபுபக்கர் அல்-பக்தாதி தலைக்கு ரூ.60 கோடி பரிசு: அமெரிக்கா

வெள்ளிக்கிழமை, 11 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஜூலை.12 - ஈராக்கில் சன்னி பிரிவைச் சேர்ந்த தீவிரவாதிகள் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர். அங்கு மொகசூல், திக்ரித், கிர்குக், பாய்ஜரி, பலூஜா உள்ளிட்ட பல நகரங்களை பிடித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

அதேபோன்று சிரியாவின் பல நகரங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஈராக், சிரியாவில் பிடித்த பகுதிகளை ஒன்றிணைத்து இஸ்லாமிய நாடு என்ற தனிநாட்டை உருவாக்கியுள்ளனர். இந்த தீவிரவாதிகளின் தலைவராக அபுபக்கர் அல்-பக்தாதி இருந்து வருகிறார். இவரை தாங்கள் உருவாக்கிய இஸ்லாமிய நாட்டின் தலைவராக அதாவது காலிபாத், ஆகநியமித்துள்ளனர். ஏற்கெனவே இவர் கடந்த 2011-ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்காவால் தேடப்படும் குற்றவாளி ஆக அறிவிக்கப்பட்டுள்ளார்.அவரது தலைக்கு ரூ.60 கோடி பரிசு வழங்குவதாக ஏற்கெனவே அமெரிக்கா அறிவித்து இருந்தது.

தற்போது இணையதளங்களிலும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. அவர் குறித்து தகவல் தெரிவித்தாலோ அல்லது கைது செய்து ஒப்படைத்தாலோ பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்