முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெர்மனியை தோற்கடிக்க மெஸ்சிக்கு நெய்மர் வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 11 ஜூலை 2014      விளையாட்டு
Image Unavailable

 

பிரேசில், ஜூலை- 13 - உலக கோப்பை கால்பந்தில் கால் இறுதி ஆட்டத்தில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் முதுகெலும்பில் காயம் அடைந்தார். இதனால் போட்டியில் இருந்து விலகினார். அவர் இல்லாமல் விளையாடிய பிரேசில் அணி அரை இறுதியில் ஜெர்மனியிடம் தோற்று வெளியேறியது.

இந்த நிலையில் நெய்மார் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பிரேசில் தோல்வி பற்றி கூறியபோது கண்கலங்கினார். பிறகு தலையை குணிந்த படி கண்ணீரை துடைத்துக் கொண்டார். அதன் பின் உணர்ச்சியை கட்டுப்படுத்தி கொண்டு பேசினார். மேலும் அவர் கூறியதாவது:

என்னை காயப்படுத்திய ஜூனிகா அடுத்த நால் என்னிடம் மன்னிப்பு கேட்டார். நான் அவரை வெறுக்கவில்லை. அவர் வேண்டுமென்றே காயப்படுத்தியதாக நினைக்கவில்லை. காயம் பற்றி பேசுவது கடினமாக இருக்கிறது. அடிப்பட்ட முதுகெலும்பு இன்னும் 2 செ.மீ. விலகியிருந்தாள் நான் வீல் செரில் தான் அமர்ந்து வந்து இரு்பபேன். நாங்கள் சாம்பியன் பட்டம் பெற வாய்ப்பு இருந்தது. ஆனால் அதில் தோற்றுவிட்டோம். பிரேசில் ஒரு நல்ல அணி, இருந்தபோதிலும் திறமையை காட்ட தவறிவிட்டோம்.

இறுதிப்போடிக்கு முன்னேறிய அர்ஜென்டினா அணியில் எனது நண்பர் லியோனஸ் மெஸ்சி உள்ளார். அவர் திறமையான வீரர். அவரும், நானும் பாரிசிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறோம். அவர் சாம்பியன் பட்டம் வெல்ல தகுதியானவர். அவரை நான் உற்சாகப்படுத்துவேன். இறுதிப்போட்டியில் ஜெர்மனியை அவர் தோற்கடிக்க வேண்டும். அது நடக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்