முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நேரத்தில் அனுமதி: 2 விமானங்கள் மோதல் தவிர்ப்பு

சனிக்கிழமை, 12 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை 13 - நடுவானில் 2 விமானங்கள் மோதி கொள்ளும் அபாயம் விமானியின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்டது.

மேற்கு வங்காள மாநிலம் பக்தோக்ரா என்ற இடத்தில் இருந்து 130 பயணிகளுடன் டெல்லிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. அதே சமயம் 120 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் ஒன்று அதே பாதையில் சென்று கொண்டிருந்தது. இரு விமானங்களும் ஒரே நேரத்தில் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தன.

இரு விமானங்களும் நேர் எதிரில் வந்த நிலையில் ஆயிரம் மீட்டர் தொலைவில் நெருங்கிய போது இண்டிகோ விமானி எதிரில் விமானம் வருவதை கண்டுபிடித்து உஷாரானார். அதன் பிறகு ஏர் இந்தியா விமானியும் கவனித்து விட்டார். சற்று தொலைவில் வந்த போது இரு விமானங்களின் பறக்கும் உயரும் ஒன்றுக்கு ஒன்று மாறுபடும் வகையில் குறைக்கப்பட்டது. இதனால் விமானங்கள் மோதுவது தவிர்க்கப்பட்டது. இரு விமானங்களும் அந்த இடத்தை கடந்து சென்று விட்டன.

விமானியின் சாமர்த்தியத்தால் விமானங்கள் மோதல் தவிர்க்கப்பட்டு 250 பயணிகள் உயிர்தப்பினர். ஒரே நேரத்தில் இரு விமானங்களும் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க விமான கட்டுப்பாட்டு அதிகாரி அனுமதி அளித்ததே இதற்கு காரணம் என்று தெரியவந்தது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்