முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை பாரத ஸ்டேட் வங்கி அலுவலகத்தில் தீ விபத்து

சனிக்கிழமை, 12 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை 13-சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள பழம்பெரும் அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கட்டடத்தில், பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது..

பாரத ஸ்டேட் வங்கியின் தலைமையக கட்டடத்தில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்ட தீ மேலும் 2 மாடிகளுக்கு பரவியது. தீப்பிடித்த தளத்தில் இருந்து கரும்புகை எழுந்ததால் அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தீ விபத்தையடுத்து பாரிமுனையில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன

பாரத ஸ்டேட் வங்கி அலுவலகம் அமைந்துள்ள அந்த கட்டிடத்தின் ஒரு தளத்தில் தீப்பிடித்ததும் இதுபற்றி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 2வது தளத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் பற்றி எரியும் தீயில் கணிணி உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் வெடித்து சிதறின.

. தீ மற்ற கட்டிடங்களுக்கு பரவாமல் தடுத்த தீயணைப்பு வீரர்கள், முற்றுலுமாக தீயை அணைத்தனர்.இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

தீ விபத்து குறித்து, பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை பொதுமேலாளர்(சென்னை வட்டம்) சூரிய பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:

வங்கியில் பணம்-நகை பெட்டகங்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பாக உள்ளன. அலுவலக பயன்பாட்டிற்கான கோப்புகள் மற்றும் மரச்சமான்கள் மட்டுமே தீயில் எரிந்து நாசமாகி உள்ளன. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதுவும் இல்லை. வங்கியின் அனைத்து கணக்கு ஆவணங்களும் திருப்பி எடுக்கும் வகையில் கோர்-பேங்க் முறையில் பாதுகாக்கப்பட்டு வருவதால் ஆவண இழப்புகள் இல்லை.

வாடிக்கையாளர்களுக்கு முக்கியமாக கூறி கொள்வது என்னவென்றால், உங்களுடைய பணம் மற்றும் நகைகள் அனைத்தும் பத்திரமாக உள்ளது. எனவே அதுப்பற்றி யாரும் சிறிதளவும் அச்சமோ, கவலையோ கொள்ள தேவையில்லை.

இவ்வாறு சூரிய பிரகாஷ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்