முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் விவகாரம் 2018 உலகக்கோப்பையை பாதிக்காதாம்

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

ரியோடிஜெனிரோ, ஜூலை 14 - உக்ரைன் விவகாரத்தால் ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டி பாதிக்காது என்று ரஷ்ய விளையாட்டு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதிகளை ரஷ்ய ஆதரவு படையினர் கைப்பற்றி உள்ளனர். அங்கிருந்து உக்ரைன் அரசு படையினரையும் வெளியேற்றி அப்பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக ரஷ்ய கடற்படைகளும் கருங்கடல் பிராந்தியத்தில் போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அத்துடன் ரஷ்யா மீது பொருளாதார தடையும் விதித்துள்ளன.

இந்நிலையில் பிரேசிலில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியை காண்பதற்காக சென்றுள்ள ரஷ்ய அதிபரும், உக்ரைன் அதிபரும் சந்தித்து சுமூக பேச்சுவார்த்தை நடத்தினர் என்று கூறப்பட்டது. 2018ல் ரஷ்யாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள உலக கோப்பை போட்டிகளை உக்ரைன் விவகாரம் பாதிக்காது என ரஷ்ய விளையாட்டு துறை அமைச்சர் விட்டாலி முட்கே தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

தற்போது நடைபெற்று வரும் இறுதி போட்டியின் முடிவில் அடுத்த உலக கோப்பை போட்டிக்கான பொறுப்புகளை பிரேசில் அதிபர் தில்மா ரவுசப், ரஷ்ய அதிபர் புதினிடம் ஒப்படைக்கிறார். உக்ரைன் பிரச்சினை குறித்து இரு நாட்டு தலைவர்களும் சந்திப்பதுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும். இது குறித்து சில சமயம் கடுமையான விமர்சனங்கள் எழலாம். விமர்சனங்கள் ஆக்கபூர்வமான ஒன்றுதான். உக்ரைன் பிரச்சினையால் ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அடுத்த உலக கோப்பை போட்டிகளை சுமார் ரூ. 1.2 லட்சம் கோடியில் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago