முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வியாபாரியிடம் வெங்காயம் வாங்கி ரூ. 23 லட்சம் மோசடி

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

திருவண்ணாமலை, ஜூலை 14 - திருவண்ணாமலை பெரிய கடை தெருவில் காய்கறி மண்டி நடத்தி வருபவர் முருகன். இவர் பெங்களூர் அருகே உள்ள லட்சுமி தேவி நகரை சேர்ந்த நாராயணன் என்பவரிடம் மண்டிக்கு தேவையான உருளைக்கிழங்கு, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை வாங்கி வந்துள்ளார்.

2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வாங்கிய வெங்காயம், பூண்டுக்கு ரூ. 13 லட்சத்து 80 ஆயிரம் பாக்கி வைத்துள்ளார். நாராயணன் பணத்தை கேட்ட போது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக கூறி பணம் கொடுக்காமல் முருகன் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில் முருகனின் தந்தை ஜெயபால், உறவினர் ராமதாஸ் ஆகியோர் முருகன் தர வேண்டிய பணத்துக்கு தாங்கள் பொறுப்பேற்று கொள்வதாக கூறி உள்ளனர்.

மேலும் தொடர்ந்து வெங்காயம், பூண்டு அனுப்புமாறும் மொத்தமாக சேர்த்து பணத்தை கொடுத்து விடுவதாகவும் கூறி உள்ளனர். இதை நம்பிய நாராயணன் தொடர்ந்து வெங்காயம் அனுப்பி வந்துள்ளார். பணம் கேட்கும் போதெல்லாம் காலம் கடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் பாக்கி ரூ. 22 லட்சத்து 88 ஆயிரமாக உயர்ந்தது. இதை கேட்ட போது பணத்தை கேட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி இருக்கின்றனர்.

இது குறித்து நாராயணன் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசியிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து முருகன், அவருடைய தந்தை ஜெயபால், உறவினர் ராமதாஸ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago