முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கையை 8-ஆக்க திட்டம்

திங்கட்கிழமை, 14 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை 15 - வீடுகளுக்கு வழங்கப்படும் மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12லிருந்து 8ஆக குறைப்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியில் இருந்த போது வீடுகளுக்கு மானிய விலையில் ஓராண்டுக்கு வழங்கப்பட்டு வந்த 12 சிலிண்டர்களின் எண்ணிக்கை 6ஆக குறைக்கப்பட்டது. இதற்கு பொதுமக்களும் எதிர்க்கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து சிலிண்டர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்த்தப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாரதீய ஜனதா கட்சி காங்கிரஸ் அரசின் சிலிண்டர் குறைப்பு நடவடிக்கையை கடுமையாக எதிர்த்தது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலும் வந்ததால் தேர்தலில் தோல்வி ஏற்படலாம் என்ற பயம் காரணமாக மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை மீண்டும் 12ஆக உயர்த்தியது காங்கிரஸ் அரசு. ராகுல் காந்தியின் பரிந்துரையை ஏற்றும் இவ்வாறு சிலிண்டர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 7 அல்லது 8ஆக குறைக்க புதிதாக பதவியேற்றுள்ள மோடி அரசும் முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அன்று காங்கிரஸ் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக இன்று அதை விட மோசமான முடிவை எடுப்பதுதான் வேதனைக்குரிய விஷயம். ஓராண்டுக்கு வீடுகளில் 7 அல்லது 8 சிலிண்டர்கள்தான் பயன்படுத்தப்படுகிறது என்கிற தகவல் ஆய்வு மூலம் கிடைத்ததாகவும் அதனால்தான் இந்த முடிவு எடுக்கப்படுவதாகவும் புதிய பாஜக அரசு கூறுகிறது. இதன்படி மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கை 7 அல்லது 8 ஆக குறைக்கப்படலாம். ஏற்கனவே மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்