முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது ஜெர்மனி

திங்கட்கிழமை, 14 ஜூலை 2014      விளையாட்டு
Image Unavailable

 

ரியோடிஜெனீரோ, ஜூலை.15 - உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை 4 வது முறையாக வென்றது ஜெர்மனி.
20-வது உலக கோப்பை கால்பந்து போட்டி தென் அமெரிக்காவில் உள்ள பிரேசிலில் கடந்த மாதம் 12-ஆம் தேதி தொடங்கியது. 1 மாத காலம் நடைபெற்ற இந்த கால்பந்து திருவிழாவில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இறுதிப் போட்டி இந்திய நேரப்பட்டி நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு ரியோடி ஜெனீரோவில் உள்ள மரக்கானா மைதானத்தில் நடந்தது.

இதில் ஐரோப்பாவைச் சேர்ந்த ஜெர்மனி-தென் அமெரிக்கா கணடத்தில் உள்ள அர்ஜென்டினா அணிகல் மோதின. ஜெர்மனி 4-வது முறையாகவும், அர்ஜென்டினா 3-வது முறையாகவும் கோப்பையை வெல்லும் ஆவளுடன் விளையாடின. ஜெர்மனி தொடக்கத்திலேயே தாக்குதல் ஆட்டத்தில் ஆடுபட்டது. அர்ஜென்டினா பாதுகாப்பு ஆட்டத்தில்தான் கூடுதல் கவனம் செலுத்தியது. இதனால் ஜெர்மனி வீரர்களால் மிகவும் முன்னேறி செல்ல இயலவில்லை.

நேரம் செல்ல செல்ல அர்ஜென்டினா தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. இதன் பயனாக 20-வது நிமிடத்தில் அந்த அணிக்கு கோல் அடிக்க மிகவும் அருமையான வாய்ப்பு கிடைத்தது. அந்த அணியின் முன்கள வீரர் கோன்சலா ஹிகுயின் இந்த வாய்ப்பை வீணடித்து விட்டார். கோல் கம்பத்துக்கு வெளியே அடித்து அனைவரையும் ஏமாற்றினார். இதன் பிறகு சில நிமிடங்கல் கழித்து அவர் அடித்த கோல் நடுவரால் ஆப்சைடு என்று நிராகரிக்கப்பட்டது. டெலிவிஷன் ரீபிளேயில் இது தெளிவாக தெரிந்தது.

இதே போல் ஜெர்மனி அணியின் கோல்வாய்ப்பை அர்ஜென்டினா கோல்கீப்பர் ரோமிரோ முறியடித்தார். காயம் அடைந்த கிரம்பெருக்கு பதிலாக மாற்று வீரராக களம் இறக்கப்பட்ட ஆந்த்ரே ஸ்குருள் அடித்த பந்தை அருமையாக தடுத்தார். முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் ஒரு கோல் கூட போடவில்லை. 2-வது பகுதி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நட்சத்திர வீரர் மெஸ்சிக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்து. அவர் அடித்த பந்து கோல் கம்பத்தை விட்டு சற்று விலகி சென்றது. இதனால் ஜெர்மனி கோல் வாங்கு வதில் இருந்து தப்பியது. இதன் பிறகு இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக போராடினார்கள். ஆனால் முடியவில்லை.

நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடத்தில் கோல் விழாததால் சாம்பியன் பட்டத்தை நிர்ணயிப்பதற்காக கூடுதல் நேரமான 30 நிமிடம் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்தின் தொடக்கத்திலேயே ஜெர்மனியின் கோல் வாய்ப்பை அர்ஜென்டினா கோல்கீப்பர் முறியடித்தார். ஆந்த்ரே அடித்த பந்தை அவர் அருமையாக தடுத்தார். இதே போல் அர்ஜென்டினா மாற்று வீரர் பலாசியா கோல் அடிக்கும் நல்ல வாய்ப்பை தவற விட்டார்.

கூடுதல் நேரத்திலும் கோல் விழாமல் ஆட்டம் பெனால்டி ஷூட்டுக்கு சென்று விடுமோ என்று இருந்த நிலையில் 113-வது நிமிடத்தில் ஜெர்மனி கோல் அடித்து அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. குளுசுக்கு பதிலாக மாற்று வீரராக சேர்க்கப்பட்ட மரியோ கோட்ஸி இந்த கோலை அடித்தார். ஆண்ட்ரு அடித்த பந்தை நெஞ்சால் வாங்கி இடது காலால் மிகவும் அருமையாக கோல் வளைக்குள் அடித்தார் இந்தப் போட்டித் தொடரில் அவர் அடித்த 2-வது கோலாகும். கோட்ஸி அடித்த அந்த கோல்தான் ஜெர்மனி சாம்பியன் பட்டம் பெறும் கோலாக அமைந்தது.

பதிலுக்கு கோல் அடிக்க சமன் செய்ய அர்ஜென்டினா கடுமையாக போராடியது. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மெஸ்சி அடித்த பிரிகீக் பந்து கோல் கம்பத்துக்கு மேலே சென்றது. முடிவில் ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி உலக கோப்பையை கைப்பற்றியது. அந்த அணி 4-வது முறையாக உலக கோப்பையை வென்றுள்ளது. இதற்கு முன்பு 1954-, 1974, 1990 ஆகிய ஆண்டுகளில் ஜெர்மனி சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க கண்டத்தில் நடந்த உலக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் ஐரோப்பிய நாடு என்ற வரலாற்று சாதனையை ஜெர்மனி படைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago