முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பையை வென்ற ஜெர்மனிக்கு ரூ.210 கோடி பரிசு

திங்கட்கிழமை, 14 ஜூலை 2014      விளையாட்டு
Image Unavailable

 

ரியோடிஜெனீரோ, ஜூலை.15 - உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி அணிக்கு 18 கேரட்தங்க கோப்பையுடன் ரூ.210 கோடி பரிசு தொகையும் வழங்கப்பட்டது. உலக கோப்பை வரலாற்றில் இவ்வளவு அதிகமான பரிசு தொகை வழங்கப்பட்டது இல்லை. கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணிக்கு ரூ.180 கோடி தான் கிடைத்தது.

2-வது இடத்தை பிடித்த அர்ஜென்டினா அணிக்கு ரூ.150 கோடி பரிசாக வழங்கப்பட்டது. 3-வது இடத்தை பிடித்த நெதர்லாந்து அணிக்கு ரூ.120 கோடியும், 4-வது இடத்தை பிடித்த பிரேசில் அணிக்கு 108 கோடியும் வழங்கப்பட்டது. கால் இறுதியில் நோற்று வெளியேறிய பிரான்ஸ், கொலம்பியா, பெல்ஜியம், கோஸ்டாரிகா ஆகிய 4 அணிகளுக்கு தலா ரூ84 கோடியும். 2-வது சுற்றில் வெளியேறிய சிலி, உருகுவே, மெக்சிகோ, கிரீஸ், நைஜீரியா, அல்ஜீரியா, சுவட்சர்லாந்து, அமெரிக்கா ஆகிய 8 அணிகளுக்கு தலா ரூ.54 கோடியும் வழங்கப்பட்டன. முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்ட ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து, குரோஷியா, கேமரூன், ஆஷ்திரேலியா, ஐவேரி கோஸ்ட், ஜப்பான், ஈகுவடார், ஹோண்டுராஸ், போஸ்னியா, ஈரான், போர்ச்சுக்கல், கானா, ரஷ்யா, தென்கொரியா ஆகிய 16 அணிகளுக்கு தலா ரூ.48 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.

கிளப் அணிகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு உள்பட இந்த உளக கோப்பையின் மொத்த பரிசு தொகை ரூ.3456 கோடியாகும், இது கடந்த உலக கோப்பையை விட 37 சதவீதம் கூடுதலாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago