முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை கால்பந்து: மெஸ்ஸிக்கு தங்க பந்து

திங்கட்கிழமை, 14 ஜூலை 2014      விளையாட்டு
Image Unavailable

 

ரியோடிஜெனிரோ, ஜூலை, 15 - உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சிறப்பாக விளையாடிய அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்சிக்கு தங்க பந்து அளிக்கப்பட்டுள்ளது. சிறந்த கோல் கீப்பரான ஜெர்மனியின் மனுவேல் நெயுருக்கு தங்க கையுறை வழங்கப்பட்டுள்ளது.

20வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிரேசிலில் நடைபெற்றன. இதில் அர்ஜென்டினாவை வீழ்த்தி ஜெர்மனி 4வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.

கால்பந்து போட்டிகளைப் போலவே மிகவும் எதிர்பார்க்கப்பட்டதுதான் தங்க பந்து, தங்க றை, தங்க காலணி யாருக்கு என்பதும். இதற்காக அர்ஜென்டினாவில் இருந்து ஏஞ்சல் டி மரியா, சேவியர் மாஸ்கரனோ, லியோனல் மெஸ்சி ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. ஜெர்மனியின் தாமஸ் முல்லர், டோனி குரூஸ், மேட்ஸ் ஹூம்மல்ஸ், பிலிப் லாம் ஆகியோரும் தங்க பந்து பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். பிரேசிலின் நெய்மர், நெதர்லாந்தின் ரோபன், கொலம்பியாவின் ஜேம்ஸ் பெயரும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இவர்களில் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸிக்கு தங்க பந்து கிடைத்துள்ளது.

அதே நேரத்தில் சிறந்த கோல் கீப்பருக்கான தங்க கையுறைக்கு கோஸ்டரிகாவின் நவாஸ், ஜெர்மனியின் மனுவேல் நெயுர், அர்ஜென்டினாவின் செர்ஜியோ வரானே பெயர் பரிந்துரைக்கப்பட்டன. இவர்களில் ஜெர்மனியின் மனுவேல் நெயுருக்கு தங்க கையுறை கிடைத்தது.

கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸூக்கு தங்க காலணி கிடைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்