முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டு: மத்தியமைச்சர் பதில்

செவ்வாய்க்கிழமை, 15 ஜூலை 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை.16 - தனது வீட்டில் சட்டவிரோதமாக, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தொலைபேசி இணைப்பகம் அமைத்திருந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை விசாரித்து வருவதாகவும்,தவறு செய்தவர் உயர் பதவியை வகித்தவர் என்பதற்காக யாரையும் காப்பாற்ற மத்திய அரசு முயற்சிக்காது என்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் புரசாத் கூறினார்.

மக்களவையில் கேள்விநேரத்தின்போது அதிமுக உறுப்பினர் தம்பிதுறை பேசியதாவது: தொலைத்தொடர்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் தயாநிதி மாறன் தனது வீட்டில் சட்டவிரோதமாக 360 இணைப்புகளைக் கொண்ட தனித் தொலைப்பேசி இணைப்பகத்தை அமைத்திருந்ததாகவும், இதன் மூலம், அவரது குடும்ப நிறுவனமான சன் தொலைக்காட்சி குழுமம் பலன் அடைந்ததாகவும் தெரிகிறது. இந்த சட்டவிரோத இணைப்பகத்தால் அரசுக்கு சுமார் ரூ.1000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை தெரிவிக்க வேண்டும் என்றார் தம்பிதுறை.

இதற்கு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளிக்கையில், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடபெற்றுவரும் நிலையில், இது குறித்து தற்போது விவாதிப்பது முறையாகாது. இருப்பினும், இந்த விவகாரத்தில் முந்தைய அரசின் தவறுகள் முறையாக விசாரிக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்