முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவில் மெட்ரோ ரயில் தடம் புரண்டதில் 21 பேர் பலி

புதன்கிழமை, 16 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

மாஸ்கோ, ஜூலை.17 - ரஷ்யாவில் மெட்ரோ ரயில் தடம் புரணடு விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர். 136 பேர் படு காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் கிழக்குப் பகுதியில் உள்ள பார்க் போபெடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே சுரங்கப் பாதையில் சென்று கொண்டிருந்த மெட்ரோ ரயில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். சுரங்கப் பாதையின் உள்ளே ரயில் பெட்டிக்குள் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாஸ்கோ நகர துணை மேயர் பியோதர் பிர்யூகோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மீட்புப் பணியில் 60 ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஹெலிகாப்டர்கல் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று மாஸ்கோ நகர சுகாதாரத் துறைத் தலைவர் ஜார்ஜி கொலுக்கோவ் தெரிவித்தார். இதுகுறித்து ரஷ்யா அவசர கால மேலாண்மைத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த போட்டியில், தவறாக எழுப்பப்பட்ட எச்சரிக்கை ஒலி காரணமாக அந்த ரயில் திடீரென நிறுத்தப்பட்டதால் இந்த விபத்து நடந்துள்ளது, என்றார்.

ரஷ்யாவில் கடந்த 80 ஆண்டுகளில் நடைபெற்ற மிக மோசமான மெட்ரோ ரயில் விபத்து இது என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்