முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - இங்கிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் துவக்கம்

புதன்கிழமை, 16 ஜூலை 2014      விளையாட்டு
Image Unavailable

 

லார்ட்ஸ், ஜூலை.17 - இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு 20-20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் நாட்டிங்கமாமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. முரளி விஜய் முதல் இன்னிங்சில் சதமும், 2-வது இன்னிங்சில் அரை சதமும் அடித்தார். இதே போல் கேப்டன் டோனி, பின்னி, புஜாரா ஆகியோரும் தங்களது பங்களிப்பை அளித்தனர். முதல் இன்னிங்சில் புவனேஷ்வர்குமார், முகமது சமி கடைசி விக்கெட்டுக்கு 111 ரன் அடித்து இருந்தனர். பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார், முகமது சமி, இஷாந்த் சர்மா சிறப்பாகவே செயல் பட்டனர்.

முதல் டெஸ்டில் பந்து ஏகிறவில்லை. இதனால் பேட்ஸ்மேன்களுக்கு அதிக சிறமம் ஏற்படவில்லை. ஆனால், லார்ட்ஸ் மைதானம் அதில் இருந்து வேறுபட்டு இருக்கும். இதனால் பேட்டிங்கில் இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். முதல் டெஸ்ட்டை போலவே லார்ட்ஸ் டெஸ்டிலும் 5 பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கும் என்று தெரிகிறது.

இருந்த போதிலும் லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து பந்து வீச்சை எதிர்கொள்வது இந்தியாவுக்கு பெரும் சவாலாகவே இருக்கும். இதை திறம்பட இந்திய பேட்ஸ்மேன்கள் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீராட் கோலி, ஷிகர் தவான், ஆகியோர் திறைமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை பேட்டிங், பந்துவீச்சில் சம்பலத்துடன் உள்ளது. பேட்டிங்கில் ஜோரூட், ராய்சன், பெல், பேலன்னைஸ் ஆகியோர் சிறப்பான் நிலையில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்