முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கன் விமான நிலையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

வியாழக்கிழமை, 17 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

காபூல், ஜூலை.18 - ஆப்கான் தலைநகர் காபூலில், சர்வதேச விமான நிலையத்தின் மீது வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கி சூடு நடத்தியும் தீவிரவாதிகள் தாக்கி உள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது நேற்று காலை 4.30 மணி முதல் துப்பாக்கி சூடு நடத்தியும், ராக்கெட் வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் காபூல் விமான நிலையத்தின் அருகே கட்டுமான நிலையில் இருக்கும் கட்டடம் ஒன்றை தங்கள் வசம் வைத்துக்கொண்டு, தாக்குதல் நடத்தி உள்ளனர்.

தீவிரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்திய ஆப்கான் பாதுகாப்புப் படையினர், பல மணி நேர போராட்டத்திற்கு பின் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவந்தனர். இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ள ஆப்கான் உள்துறை அமைச்சகம், சேதம் தொடர்பான எந்த தகவலையும் வெளியிடவில்லை. மேலும், இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony