முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணியின் சிறந்த கேப்டன் டோணியே: டிராவிட்

வியாழக்கிழமை, 17 ஜூலை 2014      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூலை.18 - இந்திய அணிக்கு மகேந்திரசிங் டோணிதான் சிறந்த கேப்டனாக இருக்க முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயான் சேப்பல், டோணியின் தலைமை பண்பு குறைந்துவிட்டதாக கூறி விராட் கோலியை அடுத்த கேப்டனாக்க வேண்டும் என்று கூறியிருந்த நிலையில், ராகுல் டிராவிட் இந்த கருத்தை தெரிவித்தார.

இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறியதாவது:

இந்திய அணியை முன்னணி அணியாக மாற்றியவர் டோணி. இப்போதும் அவர் இந்தியாவை சிறந்த அணியாக வழிநடத்த கூடிய திறமை உள்ளவர்தான். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தோற்றதற்காக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் டோனியை குறை கூறுபவர்கள் இருக்கிறார்கள்.

இப்போது அவரது கையில் இருப்பவர்கள் எல்லாருமே இளம் வீரர்கள். அனுபவமே இல்லாத வீரர்களை வைத்து வெளிநாட்டு மன்னில் போய் விளையாடுவது மிகவும் சவாலான விஷயம். ஆனால் டோனி அதை சிறப்பாக செய்து வருகிறார். இளம் வீரர்களை கொண்டே இந்திய அணிக்கு பெருமை தேடி தருகிறார். இதை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும்.

ஆம் வீராட் கோலியும் ஒர் திரைமைவாய்ந்த வீரர்தான் ஆனால் அவருக்கான நேரம் இன்னும் வர வில்லை. அவர் சிறப்பான பார்மில் இருந்து வருகிறார். ஸ்டூவர்ட் பின்னி சர்வதேச தரத்துக்கு விளையாடக்கூடியவர் என்பதை முதல் தொடரிலேயே நிரூபித்துள்ளார். பின்னி அதிக நேரம் பந்து வீசவில்லை என்று சிலர் குறை கூறுகிறார்கள். ஆனால் அந்த மைதானத்தின் நிலைமை அதிக நேரம் பந்து வீச உகந்ததாக இல்லை என்பதே உண்மை. லாட்சில் அவருக்கான தீனி இருக்கும்.

லாட்சில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளம் இருக்கும். எனவே முதல் போட்டியை போல இல்லாமல், மேலும் விறுவிறுப்பான போட்டியாக இது அமையும். ஜடேஜாவை நீக்கிவிட்டு அஸ்வினை களமிறக்குவது தற்போதைய சூழலில் சரியாக இருக்காது. அஸ்வினுக்கு ஏற்ற சூழல் நிலவும்போது அவருக்கும் வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு ராகுல் டிராவிட் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago