முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் இடத்தை பிடித்தது ஜெர்மனி

வெள்ளிக்கிழமை, 18 ஜூலை 2014      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை.19 - சர்வதேச கால்பந்து தரவரிசையில் உலக சாம்பியனான ஜெர்மனி 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலக கோப்பையில் அபாரமாக ஆடியதன் மூலம் ஓர் இடம் முன்னேற்றம் கண்டு முதலிடத்தைப் பிடித்திருக்கிறது ஜெர்மனி.

இறுதிச்சுற்று வரை முன்னேறிய அர்ஜென்டீனா 3 இடங்கள் முன்னேறி, 2-வது இடத்தையும், உலகக் கோப்பையில் 3-வது இடத்தைப் பிடித்த நெதர்லாந்து 12 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தையும், கொலம்பியா 4 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தையும், பெல்ஜியம் 6 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தையும், உருகுவே ஓர் இடம் முன்னேறி 6-வது இடத்தையும் பிடித்துள்ளன.

அரையிறுதி வரை முன்னேறியபோதும் அதிக கோல்களை வாங்கிய பிரேசில், 4 இடங்களை இழந்து 7-வது இடத்தையும், முதலிடத்தில் இருந்த ஸ்பெயின் 7 இடங்களை இழந்து 8-வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்திய அணி 154-வது இடத்தில் இருந்து 3 இடங்கள் முன்னேற்றம் கண்டு 151-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்