முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20-வது காமன்வெல்த் போட்டி 23- ல் ஸ்காட்லாந்தில் துவக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2014      விளையாட்டு
Image Unavailable

 

ஸ்காட்லாந்து, ஜூலை, 21 - ஆசிய விளையாட்டு போட்டி மற்றும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கு அடுத்தப்படியாக உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தும் பிரமாண்டமான விளையாட்டு திருவிழாவான காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோவ் நகரில் வருகின்ற 23ம் தேதி துவங்குகிறது.

காமன்வெல்த் அமைப்பில் 53 நாடுகள் உறுப்பினராக இருந்த போதிலும், மொத்தம் 71 அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன. 11 நாட்கள் நடைபெறும் 17 வகையான போட்டிகளில் 71 அணிகளை சேர்ந்த 1,400 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் முதன்முதலில் 1930ம் ஆண்டு நடைபெற்றது. அதன்பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர்ந்து நடந்து வருகிறது. இடையில், 1942 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் இரண்டாம் உலகப்போரின் காரணமாக போட்டிகள் நடைபெறவில்லை. இதுவரை நடந்த அனைத்து காமன்வெல்த் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய ஆறு நாடுகள் மட்டுமே தொடர்ச்சியாக பங்கேற்றுள்ளனர். பிரிட்டனை சேர்ந்த இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து நாடுகளின் அணிகள் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க தனித்தனியாக தங்கள் சார்பில் வீரர்களை அனுப்புகின்றன. காமன்வெல்த் போட்டிகளில் கீழ்கண்ட விளையாட்டுகள் அட்டவணையில் இடம்பெற்றுள்ளன.

அவையாவன: வில்வித்தை, அத்லெட்டிக்ஸ், பேட்மின்டன், பேஸ்கட் பால், பாக்ஸிங், சைக்கிளிங், டைவிங், ஜிம்னாஸ்டிக், ஹாக்கி, ஜூடோ, நெட்பால், துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஸ், நீச்சல், டேபிள் டென்சிஸ், டிரையத்லான், வெயிட்லிப்டிங், மல்யுத்தம் போன்றவையாகும்.

இதுவரை 19 காமன்வெல்த் போட்டிகள் நடந்துள்ளன. அதில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியா 5 முறையும், கனடா 4 முறையும், இங்கிலாந்து 2 முறையும், காமன்வெல்த் போட்டிகளை நடத்தியுள்ளன. கடந்த 2010ம் ஆண்டு 19-வது காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடந்தன.

இந்த முறை காமன்வெல்த் போட்டிகளில் வழக்கம்போல பதக்கங்களை அள்ளி குவிப்பதில் ஆஸ்திரேலியா முனைப்புடன் உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. அதே சமயம் போட்டியை நடத்தும் ஸ்காட்லாந்து வீரர்கள் சைக்கிளிங், நீச்சல், அத்லெட்டிக்ஸ் போன்ற விளையாட்டுகளில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளது. சைக்கிளிங் போட்டியில் ஸ்காட்லாந்தின் வீரர் கேட்டி அர்ச்சி பால்ட், நீச்சல் போட்டியில் மைக்கேல் ஜெமிசன், தடகளத்தில் லிப்பிகிளெக் ஆகியோர் தங்கம் வெல்லும் முனைப்பில் உள்ளனர். அதே சமயம் தடகளப்போட்டியில் ஒலிம்பிக் போட்டிகளில் 6 தங்கம் வென்ற ஜமைக்காவின் உசேன் போல்ட் சமீபத்தில் காயம் அடைந்தார். இதனால், அவரால் பதக்கம் வெல்ல முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த 20-வது காமன்வெல்த் போட்டிகளில் ஸ்காட்லாந்தின் வீரர்கள் தங்கள் சொந்த மண்ணில் விளையாட இருப்பதால் அதிக பதக்கங்களை வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago