முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சதத்தை கோட்டை விட்ட விஜய் - தோனி: பின்னி சொதப்பல்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2014      விளையாட்டு
Image Unavailable

 

லார்ட்ஸ், ஜூலை-21 - விறுவிறுப்பான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாளான இன்று இந்தியா உணவு இடைவேளைக்கு முன்பான 2 மணி நேர ஆட்டத்தில் விஜய், தோனி, பின்னி ஆகியோர் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

உணவு இடைவேளையின் போது இந்தியா தன் 2வது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 267 ரன்கள் எடுத்துள்ளது.

ஜடேஜா 30 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 37 ரன்களுடனும், புவனேஷ் குமார் 13 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

இன்று காலை 169/4 என்று துவங்கிய இந்திய அணி, 33 ரன்களில் 3 விக்கெட்டுகளை, 8 ஓவர்கள் இடைவெளியில் இழந்தது.

முரளி விஜய் 59 ரன்னிலிருந்து 95 ரன்கள் வரை வந்தார். 247 பந்துகளை அவர் சந்தித்து சுனில் கவாஸ்கரின் பொறுமையைக் கடைபிடித்தார். தோனி 86 பந்துகளைச் சந்தித்து அறு அறுவென்று அறுத்து 19 ரன்களை மட்டுமே எடுத்து பிளன்கெட் வீசிய பந்தை ஒன்று முன்னால் சென்று ஆடியிருக்க வேண்டும், இல்லையெனில் இன்னும் பின்னால் வந்து மணிக்கட்டைத் தளர்த்தி ஆடியிருக்கவேண்டும். ஆனால் நின்ற இடத்திலிருந்து தன் வழியில் சென்று கொண்டிருந்த பந்தை தன் மட்டையால் மோசமாக ஒரு இடி இடித்தார். எட்ஜ் ஆகி 2வது ஸ்லிப்பில் பெல் கையில் தஞ்சம் அடைந்தது.

தோனிக்கு இருக்கும் பேட்டிங் டெக்னிக்கிற்கு அவர் நின்று ஆடுவது நேரத்தின் விரயமே. ஏதாவது அனாயச சுழற்று சுழற்றியிருந்தால் கூட 86 பந்துகளுக்குப் பதிலாக 45-50 பந்துகளில் ஒரு 40 ரன்களை அடித்து பங்களிப்பு செய்திருக்கலாம். ஆனால் இது போன்று ஆடினால் அது இங்கிலாந்தின் பொறியில் சிக்குவது போல்தான். தேவை ரன்கள். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வதுதான் டெஸ்ட் போட்டியில் உத்தமம்.

'இனி அடித்து ஆடப்போகிறேன்’ என்று வீராவேசப் பேட்டிக் கொடுத்த தோனி ஒரு நோஞ்சான் இன்னிங்ஸை ஆடி வெளியேறினார்.

இவர் ஆட்டமிழந்த ஓவருக்கு அடுத்த ஓவரின் 5வது பந்தில் ஸ்டூவர்ட் பின்னி பொறுப்பற்ற முறையில் ஒரு ஷாட்டை ஆடி அவுட் ஆனார். 8 பந்துகள் ரன் எடுக்க முடியாமல் ஆடிவிட்டு 9வது பந்தில் ஏன் அப்படி வாரிக்கொண்டு அடிக்கச் சென்றார் என்பது புரியவில்லை. மிட் ஆஃபில் பந்து மேலே ஏற அலிஸ்டர் குக் கேட்ச் பிடித்தார். பின்னி ரன் எடுக்காமல் அவுட் ஆனார்.

2 விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததில் அபார டெஸ்ட் இன்னிங்ஸை ஆடிவந்த முரளி விஜய்யின் கவனம் சிதறி 95 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் ஆண்டர்சனின் டீசருக்கு இரையானார். ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே சென்ற அந்தப் பந்தை அவர் ஆடியிருக்க வேண்டியத் தேவையில்லை. ஆடினார். ஆட்டமிழந்தார்.

235/7 என்ற நிலையிலிருந்து ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்தினால் உணவு இடைவேளையின் போது 267/7 என்று உள்ளது இந்தியா.

ஜடேஜா அடித்த பவுண்டரிகல் அனைத்தும் அபாரம். ஆண்டர்சனை அடித்த கவர் டிரைவ், பிராடை நேராக தூக்கி அடித்த ஷாட் மற்றும் ஒரு அதிரடி புல் ஷாட் ஜடேஜாவுக்காக பேசும் ஷாட்கள்.

புவனேஷ் குமார் 2 ரன்களில் இருந்தபோது ஜோ ரூட் கேட்சை விட்டார். அவர் அதன் பிறகு ஒரு பவுண்டரி அடித்து 13 ரன்களுடன் ஆடி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago