முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேசிய விமானத்தை தவறுதலாக சுட்டிருக்க வாய்ப்பு

புதன்கிழமை, 23 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஜூலை 24 - உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷ்ய எல்லையில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணம் செய்த 298 பேர் பலியாகினர். அந்த விமானம் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த போது ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைனும், அமெரிக்காவும் குற்றம் சாட்டி உள்ளன.

ஆனால் இதை ரஷ்யாவும், உக்ரைன்கிளர்ச்சியாளர்களும் மறுத்து வந்தனர். இதற்கிடையே இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக கிளர்ச்சியாளர்கள் மலேசிய பயணிகள் விமானத்தை வேண்டுமென்றே சுட்டு வீழ்த்தவில்லை. உக்ரைனின் சரக்கு போக்குவரத்து விமானம் என நினைத்து அதே போன்றுள்ள மலேசிய விமானத்தை தவறுதலாக சுட்டுள்ளனர். அதன் பிறகுதான் அது பயணிகள் விமானம் என தெரியவந்துள்ளது. இந்த தகவலை அமெரிக்காவின் உளவுத்துறை அதிகாரிகள் சிலர் 5 நாட்களுக்கு பிறகு தெரிவித்துள்ளனர். மேலும் விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு முன்பு ரஷ்ய ஆதரவு உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் பேசிய வயர்லஸ் உரையாடல்கள் அமெரிக்க உளவுத்துறைக்கு கிடைத்துள்ளன. அதை வைத்து நடத்திய ஆய்வின் போது தான் அவர்கள் தவறுதலாக மலேசிய பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியிருப்பது தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony