அமெரிக்க மருத்துவத்துறை உயர் பதவியில் இந்தியர்

சனிக்கிழமை, 26 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஜூலை27 - அமெரிக்காவின் மிசிசிபி மாகாண மனநல மருத்துவ வாரியத்தின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சம்பத் சிவாங்கி நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அமெரிக்காவில் மருத்துவத் துறையின் உயர் பொறுப்பை வகிக்கும் முதல் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர் என்ற பெருமையை சம்பத் சிவாங்கி பெற்றுள்ளார்.

அடுத்த ஓராண்டு அவர் இப்பதவியில் இருப்பார். முன்ன தாக மாகாண மருத்துவ வாரியத்தின் உறுப்பினர்களில் ஒருவராக சம்பத் சிவாங்கி இருந்தார். 2005 முதல் 2008-ம் ஆண்டு வரை அமெரிக்க சுகாதாரத் துறை அமைச்சகத்தின் ஆலோசகராக வும் சம்பத் சிவாங்கி பணியாற்றியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: