முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எக்ஸ்பிரஸில் 2ம் வகுப்பு பெட்டிகள் ஏசி-க்கு மாறுகின்றன

திங்கட்கிழமை, 28 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஜூலை 29 - ரயில்வே சேவையில் நவீன வசதிகளை புகுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் நவீன வசதிகளை செய்ய ரயில்வே அமைச்சகத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. எனவே பயணிகளுக்கு கூடுதல் வசதியை ஏற்படுத்தும் அதே நேரத்தில் வருவாயையும் பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தற்போதுள்ள 2ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட ரயில் பெட்டிகளை 3ம் வகுப்பு ஏசி பெட்டியாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. முதன் முதலாக தென்னக ரயில்வேயில் அமல்படுத்தும் நடவடிக்கை தொடங்கி உள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து மங்களூர் சென்ட்ரலுக்கு செல்லும் தடம் எண் 16859 ரயிலில் குளு குளு வசதி இல்லாத சேர்கார் பெட்டி தற்போது ஏசி பெட்டியாக மாற்றப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதல் அந்த பெட்டி சேவைக்கு வந்துள்ளது.

2ம் வகுப்பு ரயில் பெட்டிகளை 3ம் வகுப்பு ஏசி பெட்டிகளாக மாற்றும் திட்டம் படிப்படியாக அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் எல்லா எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஏசி வசதியுடன் கூடிய பெட்டிகளே இருக்கும். அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் இந்த திட்டத்தை நிறைவேற்றி முடித்து விட ரயில்வே இலாகா இலக்கு வைத்துள்ளது.

இதற்கிடையே 2ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட சாதாரண ரயில் பெட்டிகள் தயாரிப்பை குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே அடுத்த 6 ஆண்டுகளில் சாதாரண 2ம் வகுப்பு ரயில் பெட்டிகளே இருக்காது. எல்லா ரயில் பெட்டிகளும் ஏசி வசதிக்கு மாறுவதால் ரயில்வேக்கு கிடைக்கும் வருவாய் கணிசமாக அதிகரிக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்