ஊடுருவும் சிறுவர்களை திருப்பி அனுப்புவோம்: ஒபாமா

திங்கட்கிழமை, 28 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஜூலை.29 - அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் சிறுவர்கள் மீண்டும் அவர்களின் தாய் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார்.

கவுதமாலா, ஹோண்டுராஸ், எல் சால்வடார் ஆகிய நாடுகளின் தலைவர்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினர். அப்போது மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து சிறுவர்கள் சட்ட விரோத மாக அமெரிக்காவுக்குள் நுழை யும் விவகாரம் குறித்து விவாதிக்கப் பட்டது. இந்த சந்திப்புக்கு பிறகு அமெரிக்க அதிபர் ஒபாமா நிருபர்களிடம் கூறும்போது, அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாத வெளி நாட்டுச் சிறுவர்கள் மற்றும் சிறுவர் களுடன் கூடிய குடும்பங்கள் தங்கள் தாய்நாட்டுக்கே அனுப்பி வைக்கப்படுவார்கள் என்பதை இத்தலைவர்களிடம் தெரிவித்தேன். இப்பிரச்சினைக்கு தீர்வு காண கூட்டுமுயற்சி அவசியம் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டோம்.

அமெரிக்காவுக்குள் சட்ட விரோத ஊடுருவலை தடுக்க எல்லை ரோந்துப் படையினர் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இப்படைக்கு கூடுதல் நிதி ஒதுக் கீடும், வசதிகளும் செய்து தரப்படும். ஏற்கெனவே ஊடுருவிய சிறுவர்கள் நல்ல முறையில் பாது காக்கப்படுவார்கள். அவர்களுக்கு அதிக வசதிகள் செய்துதரப்படும். இவர்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க குடியேற்றத்துறை நீதிமன்றங்களுக்கு கூடுதல் வசதிகளும், நிதி ஒதுக்கீடும் செய் யப்படும்.

குழந்தைகளை சட்டவிரோத மாக எல்லையை தாண்டி அனுப்பு வதன் மூலம் தாங்கள் மிகப்பெரிய அபாயத்தை எதிர்கொள்வதை பெற்றோர்கள் உணர வேண்டும், என்றார் ஒபாமா.

இதை ஷேர் செய்திடுங்கள்: