முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேசியன் ஏர்லைன்ஸ் பெயரை மாற்ற அரசு முடிவு

செவ்வாய்க்கிழமை, 29 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

கோலாலம்பூர், ஜூலை.30 - மலேசிய விமானம் தொடர்ந்து விபத்துக்குள்ளாவதை தொடர்ந்து அதன் பெயரை மாற்ற மலேசிய அரசு ஆலோசித்து வருகிறது.

மலேசியாவின் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 298 பயணிகளுடன் கடந்த 17-ஆம் தேதி நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் நகரத்தில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூர் நகர் நோக்கி சென்றது. அப்போது உக்ரைன் வான்வெளியில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் ஏவுகணை தாக்குதலக்கு உள்ளாகி வெடித்து சிதறியது. அந்த விமானத்தில் பயணித்த 298 பேரும் பலியாயினர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இதற்கு முன் கடந்த மார்ச் மாதம் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு 5 இந்தியர்கள் உள்பட 239 பேருடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், வியட்நாம் வான்வெளியில் பறந்த போது மாயமானது. இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் அந்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விமானங்கள் விபத்துக்குளானதில் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக கடுமையான வருவாய் இழப்பையும், நற்பெயரையும் இழந்துள்ளது. எனவே மலேசியன் ஏர்லைன்ஸ் பெயரை மாற்ற முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய பெயருடன் வெளிநாடுகளின் முதலீடுகளை திரட்டி விமான நிறுவனத்தை நவீனப்படுத்த மலேசியா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

தற்போது 20 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்களை கொண்டு இயங்கி வரும் இந்த நிறுவனத்தின் மொத்த பங்குளில் அதிகபட்ச முதலீட்டை மலேசிய அரசே வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago