பிலிப்பின்ஸில் தீவிரவாதிகள் தாக்குதல்: 18 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 29 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

மணிலா, ஜூலை.30 - பிலிப்பின்ஸில் அபு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 18 கிராம மக்கள் கொல்லப் பட்டனர்.

முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கும் மிகவும் பின்தங்கிய மாகாணம் சுலு. இந்த மாகாணத்தில் தலிபாவ் நகருக்கு அருகே உள்ள ஒரு கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த சிலர், ரமலான் பண்டிகையை முன்னிட்டு, கடந்த திங்கள்கிழமை 2 வேன்களில் தங்களது உறவினரின் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது

துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த சய்யப் அமைப்பைச் சேர்ந்த சுமார் 40 முதல் 50 தீவிரவாதிகள் வேனில் சென்றவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் காயமடைந்த 13 பேரில் 2 குழந்தைகள் மருத்தவமனையில் இறந்துவிட்டனர் என்று அந்த நாட்டு ராணுவ ஜெனரல் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: