முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் விளையாட்டை ஊக்கப்படுத்த சலுகைகள்: முதல்வர்

புதன்கிழமை, 30 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை 31: தமிழகத்தில் விளையாட்டை ஊக்கப்படுத்த முதல்வர் ஜெயலலிதா நேற்று முக்கிய சலுகைகளை அறி வித்துள்ளார். .

விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள் சீரமைக்கப்படுவதுடன் இளைஞர்களின் சேவையை கவுர விக்கும் வகையில் சுதந்திர தினத் தன்று விருது வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார். மாநிலத்திற்கென ஒரு இளைஞர் கொள்கை உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சட்டசபையில் அவை விதி 110ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியதாவது:

விளையாட்டு என்பது பொழுதுபோக்கிற்காக மட்டுமல் லாமல், உடல் நலம், மன நலம் பேணுவதாகவும், வாழ்க்கைக்கு பயிற்சி அளிக்கும் களமாகவும் விளங்குகிறது. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த விளையாட்டினை மேம்படுத்தும் வகையில் கடந்த மூன்றாண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள் எனது தலைமையிலான அரசால் தீட்டப்பட்டு, செயல்படுத்தப்படுகின்றன.

மனதிற்கு மகிழ்ச்சி தரும் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில், கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

வேலூர் மற்றும் திருப்பூர் தவிர ஏனைய மாவட்ட தலைமையிடங்களில் மாவட்ட விளையாட்டு வளாகங்கள், அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், பெரும்பான்மையான விளையாட்டு வளாகங்கள் 15-20 ஆண்டுகள் பழமையானவை. சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலியில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகங்களில் முக்கிய புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு வளாகத்திற்கும் ஒரு கோடி ரூபாய் வீதம் 4 கோடி ரூபாய்; மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள விளையாட்டு வளாகங்களில் அவ

சர பழுதுகள் சரிபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக 1 கோடி ரூபாய் என மொத்தம் 5 கோடி ரூபாய் ஒரு முறை சிறப்பு மானியமாக ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தற்போது திருச்சிராப்பள்ளி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகங்களில் முக்கிய புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள தலா 80 லட்சம் ரூபாய் மற்றும் பிற மாவட்ட வளாகங்களில் அவசர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள 80 லட்சம் ரூபாய் என மொத்தம் 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது 23 மாவட்டங்களில் 25 நீச்சல் குளங்கள் இயங்கி வருகின்றன. பெரும்பான்மையான நீச்சல் குளங்கள் 15-லிருந்து 20 ஆண்டுகள் வரை பழமையானவை. தண்ணீரை சரி சமமாக பராமரித்தல் மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை பேணுதல் ஆகியவை நீச்சல் குளங்களை பராமரித்தலின் மிக முக்கிய அம்சங்கள் ஆகும். பெரும்பான்மையான இடங்களில் நீரை சுத்தப்படுத்தும் நீர் வடிப்பான்கள் நிறைவான அளவிற்கு செயல்படுவதில்லை. பயன்பாடு மற்றும் தேய்மானம் காரணமாக குளங்களிலுள்ள தரைத் தளம் மற்றும் சுற்றுச் சுவர் உடைந்துள்ளன. எனவே இந்த நீச்சல் குளங்கள் 3 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு செய்து, புதுப்பித்து பராமரிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீச்சல் குளத்திலுள்ள நீருக்கு ஓசோன் சுத்திகரிப்பு செய்யப்பட்டால் நீரின் தரம் அதிகமாக உயர்த்தப்படுவதுடன், அதற்காக ஆகும் செலவுகளையும் காலப் போக்கில் மிச்சப்படுத்தலாம் என்பதன் அடிப்படையில், வேளச்சேரி நீச்சல் குள வளாகம், செனாய் நகர், மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூரில் உள்ள நீச்சல் குளங்களில் நிறுவப்பட்டுள்ள வடிகட்டும் நிலையங்களை மாற்றி தலா 15 லட்சம் ரூபாய் வீதம் 75 லட்சம் ரூபாய் செலவில் ஓசோன் சுத்திகரிப்புடன் கூடிய புதிய வடிகட்டும் நிலையங்கள் அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, முதலமைச்சர் மாநில இளைஞர் விருது என்ற புதிய விருது உருவாக்கப்படும். 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று இவ்விருது வழங்கப்படும். இந்த முதலமைச்சர் மாநில இளைஞர் விருது, 50,000/- ரூபாய் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாக இருக்கும்.

2005 ஆம் ஆண்டு எனது ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட விளையாட்டு மற்றும் உடற் கல்விக்கான தனிப் பல்கலைக்கழகம் சென்னைக்கு அருகில் உள்ள மேலக்கோட்டையூரில் 125 ஏக்கர் பரப்பிலான பரந்த வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில், மாணாக்கர் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்களின் பயன்பாட்டிற்காக உலகத் தரம் வாய்ந்த வசதிகளை அளிக்கும் வகையில், 18 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவில் நூலக அறை, ஆய்வுக் கூடம், கூட்டரங்கம் மற்றும் பல்நோக்கு உள் விளையாட்டரங்கம் ஆகியவை அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது மட்டுமல்லாமல், பரந்து விரிந்த இந்தப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள நிர்வாக கட்டடம், விடுதிகள், பணியாளர் குடியிருப்புகள், விளையாட்டு மைதானங்கள் ஆகிய இடங்களுக்கு மாணாக்கரும், பணியாளர்களும் சென்று வர வசதியாக 2 கிலோ மீட்டர் இணைப்புச் சாலை அமைத்துத் தரப்படும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, சமூக மாற்றத்திற்கான முக்கிய காரணியாகவும், சமுதாயத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் பின்னணியில் இருப்பவர்களாகவும் விளங்கிக் கொண்டிருக்கின்ற இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இளைஞர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஒருமித்த அணுகுமுறையை வழங்கும் வகையிலும், தேசிய வளர்ச்சியில் அவர்கள் முழுமையாக பங்காற்றும் வகையிலும், மாநிலத்திற்கென ஓர் இளைஞர் கொள்கை வகுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம், இளைய சமுதாயத்தினரின் உடல் நலமும், மன நலமும் மேலும் உறுதி செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago