முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அலைமோதிய கூட்டம்

வியாழக்கிழமை, 31 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஆக.1 - மாதசம்பளதாரர்கள் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய நேற்று

கடைசி நாள் ஆகும். கடந்த ஆண்டு 5.65 லட்சம் பேர் தங்களது வருமானவரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். ஆண்டுதோறும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வருபவர்களின் கூட்டத்தை சமாளிப்பதற்கு வருமானவரி தலைமை அலுவலகத்தில் ஜூலை மாதம் கடைசி வாரத்தில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்படும்.அதன்படி, இந்த ஆண்டும் 33 சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டன.இந்த 33 கவுண்டர்களில் சென்னையில் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு கீழ் வருமானம் பெறும் சம்பளதாரர்கள் தங்கள் கணக்கை தாக்கல் செய்வதற்கு 24 கவுண்டர்களும், தாம்பரம் பகுதி மக்களுக்கு 7 கவுண்டர்களும், காஞ்சீபுரம் பகுதி மக்களுக்கு 2 கவுண்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், வருமானவரி தாக்கல் செய்ய வரும் பொதுமக்களின் நிரந்தர கணக்கு எண்ணை சரிபார்ப்பதற்காக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு உதவியாக சென்னை ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவிகள் பணிபுரிந்தனர்.இவர்கள் காலை 10 பேர் எனவும், பிற்பகல் 10 பேர் எனவும் பணிபுரிந்தனர். சுழற்சி முறையில் மொத்தம் 6 வேளைகளில் 60 மாணவிகள் இந்த பணியில் ஈடுபட்டனர்..

இவர்கள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வருபவர்களுக்கு நிரந்தர கணக்கு எண் சரியாக உள்ளதா? என்பதை சரி செய்து அனுப்புவார்கள். அதன் பின்னரே மாத சம்பளதாரர்கள் கணக்கை தாக்கல் செய்வார்கள்.

நேற்று முன்தினம் வரை 12 ஆயிரத்துக்கும் மேற்படடோர் இந்த சிறப்பு கவுண்டர்களில் வருமானவரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். நேற்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்தனர்.

கடந்த ஆண்டு 44,000 பேர் இந்த சிறப்பு கவுண்டர்களில் கணக்கை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. நேற்று மாலை 5.30 மணியுடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யகெடு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago