முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் கடலில் குளிக்க சென்ற 23 பேர் மூழ்கி சாவு

வெள்ளிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

கராச்சி, ஆக 2 - பாகிஸ்தானின் கராச்சியில் கடலில் தடை செய்யப்பட்ட பகுதியில் குளித்த 23 பேர் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள். மேலும் கடல் அலையில் சிக்கிய 4 பேரை மீட்புபடையினர் தேடி வருகின்றனர்.

பாகிஸ்தானில் கராச்சி நகரில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் கிளிப்டன் கடற்கரைக்கு சென்றுள்ளனர். மழைக்காலத்தில் கடல் அலையின் சீற்றம் அதிகரித்து காணப்படுவதால் கடலில் குளிப்பதற்கு கராச்சி போலீசார் தடை விதித்து எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் கராச்சி போலீசாரின் தடையை மீறி ஏராளமானவர்கள் கடலில் குளித்தனர். அப்போது கடலில் பல அடி உயரத்துக்கு அலைகள் எழும்பியதில் கடலில் குளித்து கொண்டிருந்த பலரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். தகவலறிந்த கடலோர காவல் படையினர் உடனடியாக அங்கு விரைந்து வந்து கடலில் தேடுதல் வேட்டை நடத்தினர். எனினும் 23 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. கடல் அலையில் சிக்கிய 4 பேரை காணவில்லை என கூறப்பட்டது. அவர்களை மீட்க முயற்சித்து வருகின்றனர். ஹெலிகாப்டர்கள் மூலமும் தேடுதல் வேட்டை நடக்கிறது. கடலுக்குள் செல்ல வேண்டாம் என மக்களை பல முறை எச்சரித்தும் அவர்கள் அதையும் மீறி கடலுக்குள் சென்றதால் இவ்வளவு பேர் இறந்துள்ளனர் என்று கராச்சி போலீஸ் அதிகாரிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்