முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்பிரிக்க நாடுகளை தாக்கும் இபோலா வைரஸ் நோய்!

வெள்ளிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

புரீடவுன், ஆக.02 - ஆப்பிரிக்க நாடுகளை தாக்கும் புதிய வைரசான இபோலா வைரஸ் நோய்க்கு 57 பேர் பலியாகு உள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை கினியா, லைபீரியா, சியர்ரா லியோன் மற்றும் நைஜீரியா நாடுகளில் தற்போது புதுவிதமான இபோலா வைரஸ் நோய் பரவி வருகிறது. இந்த நோய் இபோலா என்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. இது தாக்கிய வர்களுக்கு காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி, தசைகளில் கடும் வேதனை ஏற்படும். அதன் பின்னர் குமட்டல், வாநஅதி, வயிற்றுப்போக்கு உருவாகும். அதை தொடர்ந்து கல்லீரல் மற்றும் சிறுநிரகத்தின் செயல்பாடுகள் குறையும். சிலருக்கு ரத்த போக்கு பிரச்சினையும் ஏற்படும்.

இது ஒரு உயிர்க்கொல்லி நோயாகும். இந்த நோய்தாக்கியவர்கள் மரணம் அடைந்து விடுகின்றனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இந்த நோய் தாக்கி இது வரை 57 பேர் இறந்துள்ளனர். மேலும் 729 பேர் நோய் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோயை உண்டாக்கும் இபோலா வைரஸ் கிருமிகள் குரங்குகள் அல்லது பழம் தின்னும் வவ்வால்களிடம் இருந்து பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தொற்று நோயாகும். ஒரு மனிதரிடம் இருந்து மற்றவருக்கு பரவி வருகிறது. இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த நோய் பரவாமல் தடுக்கும்படி சர்வதேச நாடுகளை எச்சரித்துள்ளது.

சியர்ரா லியோன் அதிபர் எர்னஸ் பாய் கொரேமா தனது அண்டைய நாடுகளான லைபீயா, கினியா ஆகிய நாட்டு அதிபர்களுடன் இந்த நோய் தடுப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும் தியாரா லியோனில் 60 முதல் 90 நாட்கள் வரை அவசர கால சுகாதார திட்டம் பிரகடனம் செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்