முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் தொடர் தாக்குதல்: 91 பாலஸ்தீனர்கள் பலி

சனிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

காஸா, ஆக.03 - பாலஸ்தீனத்தின் காஸா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 91 பாலஸ்தீனர்கல் பலியானார்கள். அமெரிக்கா மற்றும் ஐ.நா. சபை மேற்கொண்ட போர்நிறுத்த நடவடிக்கைகளால் பலன் ஏற்படவில்லை.

இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் உள்ள காஸா நகரில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் ராணுவம் காஸா மீது கடந்த 25 நாட்களாக தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் காஸாவில் வசிக்கும் அப்பாவி பாலஸ்தீனர்கள் பலியாகி வருகின்றனர். இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட 1,500 பேர் பலியாகியுள்ளனர். காஸாவில் உள்ள அப்பாவி மக்கள் வெளியேற வசதியாக, இஸ்ரேல் ராணுவமும், ஹமாஸ் தீவிரவாதிகளும் மனிதாபிமான அடிப்படையில் 72 மணி நேர போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்காவும் ஐநா பொது செயலாளர் பான் கீ.மூனும் அறிவித்திருந்தனர். எனினும், இஸ்ரேல் ராணுவம் காஸா நகரின் தெற்கே ரஃபா நகரில் ஹமாஸ் தீவிரவாதிகளின் பதுங்குமிடங்களில் மீண்டும் பீரங்கி தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலின் போது இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஹதார் கோல்டினை ஹமாஸ் தீவிரவாதிகள் சிறைபிடித்தனர். மேலும் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று இஸ்ரேல் ராணுவ தரப்பு கூறுகிறது. ராணுவ அதிகாரியை மீட்கும் நடவடிக்கையாக, ரஃபா நகர் மீது மீண்டும் இஸ்ரேல் ராணுவம் பீரங்கி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 3 முதல் 12 வயது உள்ள 5 குழந்தைகள் உட்பட 91 பாலஸ்தீனர்கள் பலிகானார்கள். மேலும் 350 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர் என்று பாலஸ்தீன மருத்துவமனை வட்டாரங்கல் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago