முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன கார் பாலீஸ் தொழிற்சாலை விபத்தில் 65 பேர் பலி

சனிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

பீஜிங், ஆக.03 - சீனாவின் கிழக்கே ஷாங்காய் மாநிலத்திலவ் உள்ள ஜியாங்சு பிராந்தியத்தில் நேற்று காலை கார் பாலீஷ் தொழிற்யாலை வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 65 பேர் உயிரிழந்தனர். மேலும் 100 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஷாங்காய் மாநிலத்தில் ஜியாங்சு பிராந்தியத்தில் உள்ள குன்சார் நகரில் கார் வீல் மற்றும் பல்வேறு உதிரிபாகங்களை தயாரித்து, அவற்றுக்கு பாலீஷ் செய்யும் தொழிற்சாலை உள்ளது. இத்தொழிற்சாலையில் 450 பேர் பணியாற்றி வருகின்றனர். இத்தொழிற்சாலையில் நேற்று காலை 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது தொழிற்சாலைக்குள் திடீரென குண்டு வெடித்தது போல் சத்தம் கேட்டது. இதைத் தொடர்ந்து அந்தத் தொழிற்சாலைக்குள் தீப்பிடித்து கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.

தொழிற்சாலைக்குள் இருந்து ஏராளமானவர்கள் பலத்த தீக்காயங்களுடன் வெளியே வந்து விழுந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு கவருகின்றனர். இந்த விபத்தில் 65 பேர் பலியானார்கள் மேலும் 100 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். தொழிற்சாலை திடீரென வெடித்து தீப்பிடித்ததற்கான காரணங்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்