முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்க கட்டிகள் திருட்டு: இந்திய மாணவருக்கு சிறை

ஞாயிற்றுக்கிழமை, 3 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

சிங்கப்பூர், ஆக 4 - சிங்கப்பூரில் உள்ள தங்க நகைக் கடையில் இருந்து 14,775 டாலர் மதிப்புள்ள தங்க கட்டிகளை திருடிய இந்திய மாணவர் சிவசக்தி குமரன் நாகராஜனுக்கு 4 மாத தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தங்க நகைகளை திருடிய குற்றத்திற்காக நாகராஜனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட இருந்தது. இந்நிலையில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அந்த தண்டனையை 4 மாதங்களாக குறைத்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இந்த திருட்டில் நாகராஜனின் கூட்டாளிகளான வைரம் வெங்கடேஷ் மற்றும் சாஸ்தாபிள்ளை ஆகியோரும் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புறநகர் பகுதியில் உள்ள ஒரு தங்க நகை கடைக்கு ஜூலை மாதம் 4ம் தேதி நாகராஜனும், வைரம் வெங்கடேசும் சென்றுள்ளனர். அப்போது இருவரும் தங்களை வாடிக்கையாளர்கள் போல் காட்டிக் கொண்டு அந்த கடையில் உள்ள தங்க கட்டிகளை வாங்குவது போல் பாசாங்கு செய்து அவற்றை எடுத்து கொண்டு தப்பி ஓடி உள்ளனர். அவருடன் நாகராஜனும் தப்பி சென்றுள்ளார். இவர்களின் மற்றொரு கூட்டாளியான சாஸ்தா பிள்ளை இந்த தங்க கட்டிகளை விற்று பணமாக மாற்றி உள்ளார். பின்னர் இந்த பணத்தை மூவரும் பங்கிட்டு கொண்டுள்ளனர் என்று போலீசார் கூறினர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாஸ்தா மற்றும் வெங்கடேஷ் மீதான விசாரணை நிலுவையில் உள்ளதாக நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்