முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் இந்தியா வருகிறார்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஆக.04 - இந்தியா, அமெரிக்கா இடையிலான ராணுவ உறவை வலுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் வரும் 7-ம் தேதி டெல்லி வருகிறார். இதுகுறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்திப் பிரிவு செயலாளர் ரியர் அட்மிரல் ஜான் கிர்பி கூறியதாவது:

இந்தியாவுடனான ராணுவ உறவுக்கு அமெரிக்கா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இதன் ஒரு பகுதியாக 3 நாள் பயணமாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் வரும் 7-ம் தேதி டெல்லி வருகிறார். அங்கு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் கே. தோவல் ஆகியோரையும் சக் ஹேகல் சந்தித்துப் பேசுகிறார்.

ஆப்கானிஸ்தான் நிலவரம், ராணுவ கூட்டுப் பயிற்சி, பாதுகாப் புத்துறை வர்த்தகம், கூட்டுத் தயாரிப்பு- ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்திய தலைவர்களுடன் சக் ஹேகல் ஆலோசனை நடத்துவார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்