முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 நாள் பயணமாக நேபாளம் சென்றார் பிரதமர் மோடி

ஞாயிற்றுக்கிழமை, 3 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

காத்மண்டு, ஆக.04 - இந்தியாவும், நேபாளமும் அண்டை நாடுகள் என்பதையும் தாண்டி கலாச்சார ரீதியாக பிணைப்பூண்டுள்ளன. நேபாள அரசு வம்சத்தினரின் குலதெய்வம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவில் தான். இப்போது நேபாளத்தில் அரசு வம்சம் செல்வாக்கு இழந்துவிட்ட போதிலும் நேபாள மக்கள் இந்தியாவுடனான கலாச்சார உறவை தொடர்ந்து பேணி வருகிறார்கள்.

இந்தியர்களும் நேபாள மக்களிடம் நல்லுறவு கொண்டுள்ளனர். இந்நிலையில் அண்டைய நாடுகளுடன் நல்லிணக்கத்தையும், நட்புறவையும் வளர்க்க வேண்டும் என்பதில் நாட்டம் கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி மே மாதம் தனது பதவியேற்பு விழாவுக்கு அண்டை நாடுகளின் தலைவர்கள் அனைவரையும் அழைத்தார். பதவியேற்பு விழாவில் நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா கலந்து கொண்டார். பிரதமர் மோடி முதல் முறையாக அண்டை நாடு பூட்டானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்றார். அடுத்த மாதம் அமெரிக்காவில் நடைபெறும் ஐ.நா. பொதுசபைக் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் அவர் கலந்துரையாட இருக்கிறார்.

ஐ.கே.குஜ்ரால் பிரதமராக இருந்தபோது, இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் பொருட்டு நேபாளத்திற்கு சென்றார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று நேபாளத்துக்கு சென்றுள்ளார். விமானநிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தது. நேபாள பாராளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமையும். இதற்கு முன் 1990-ஆம் ஆண்டின் அப்போதைய பிரதமர் ஜெர்மன் அதிபர் ஹெல்மெட்கோல், நேபாள பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அதன் பிறகு இப்போதுதான் வெளிநாட்டு தலைவர் ஒருவர் நேபாள பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார்.

சபாநாயகர் சுபாஷ் நெம்பாங்குடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார். பல்வேறு தரப்பினரும் மோடியின் வருகையை வரவேற்றுள்ளனர். பிரதமர் மோடி இன்று பசுபதிநாதர் ஆலயத்தில் வழிபாடு நடத்துகிறார். அங்கு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிவனுக்கு உகந்த நாள் என்று கருதப்படுகிற சோம வாரத்தில் இங்கு வழிபாடு நடத்துவது மிகவும் பயனளிக்கும் என்பது ஐதிகம் ஆகும். நேபாள அதிபர் ராம்பரன் யாதவுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்களும் மோடியை சந்தித்து பேசுகிறார்கள். இந்த இரண்டு நாள் சுற்றுப்பயணம் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் என்று வெளியுறவுத்துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின்போது நேபாளத்துக்கு பொருளாதார உதவிகளை இந்தியா அளிப்பது தொடர்பான அறிவிப்பை மோடி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின் சாரம் மற்றும் கலாச்சாரம் தொடர்பான ஒப்பந்தங்களும் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகின்றன.

மோடியைப் பொறுத்தவரை நேபாள பயணம் தனிப்பட்ட வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஜீத் பகதூர் என்ற இளைஞர், மோடியின் வளர்ப்பு மகனாக கருதப்படுகிறார். அவர் ஜீத் பகதூருக்கு எல்லா உதவிகளையும் செய்துள்ளார். ஜீத் பகதூர் அசாதாரணமான சூழ்நிலையில், தனது பெற்றோருடன் ஜீத் பகதூர் சேர்ந்து கொள்கிறார். ஜீத் பகதூரை அவரது பெற்றோருடன் சேர்தது வைக்க ஒரு முக்கிய அம்சம் உதவியுள்ளது. அது ஜீத் பகதூரின் காலில் 6 விரல்கள் உள்ளன என்பதுதான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்