முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளம் பசுபதிநாதர் கோயிலில் பிரதமர் மோடி பூஜை

திங்கட்கிழமை, 4 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

காத்மண்டு, ஆக 5 - பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேபாளம் நாட்டுக்கு சென்றுள்ளார். முதல் நாளான நேற்று முன்தினம் அவர் நேபாளம் பிரதமர் சுசில் கொய்ராலாவை சந்தித்து பேசினார். அப்போது 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

நேபாளம் நாட்டுக்கு ரூ. 6 ஆயிரம் கோடி நிதி உதவி அளிப்பதாக மோடி அறிவித்தார். இதையடுத்து நேபாள நாட்டு பாராளுமன்றத்தில் மோடி பேசினார். 2வது நாளான நேற்று காலை பிரதமர் மோடி புகழ் பெற்ற பசுபதி நாதர் கோயிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பசுபதிநாதர் ஆலயத்தில் உள்ள ஈசனுக்கு பிரதமர் மோடி சிறப்பு பூஜைகள் செய்தார். கோவில் சார்பில் அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதன் பிறகு நேபாள ஜனாதிபதி ராம்பரன் யாதவை மோடி சந்தித்து பேசினார். நேற்று பிற்பகல் நேபாளம் முன்னாள் பிரதமர் பிரசந்தாவையும் மோடி சந்தித்து பேசினார். அதன் பிறகு மோடி டெல்லி திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago