முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலஸ்தீனம் மீதான தாக்குதலை கண்டித்து பேரணி

திங்கட்கிழமை, 4 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஆக.05 - பாலஸ்தீனம் மீதான தாக்குதலை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன்பு திரண்டு ஆர்பாட்டம் நடத்தினர்.

பாலஸ்தீனத்தின் காஸா மீது கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக இஸ்ரேல் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 1500-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். போர் நிறுத்தம் செய்யுமாறு, பாலஸ்தீனம், எகிப்து மற்றும் ஐநா விடுத்த வேண்டுகோளை இஸ்ரேல் ஏற்கவில்லை. இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில், காசாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தஞ்சம் அடைந்திருந்த, ஐநா முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 10 பலியானார்கள். இதில் பெருமாபாலானோர் குழந்தைகள். இதற்கு ஐநா பொதுச்செயலாளர் பான் கீ மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் இந்த கொடூர தாக்குதலை கண்டித்து உலகம் முழுவதும் கண்டனம் குரல்கள் எழுந்துள்ளன. பிரான்சில் உள்ள பாரீஸ் நகரத்தில் இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் மவுன பேரணி நடத்தினர். அதே போல் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை நோக்கி ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையொட்டி வெள்ளை மாளிகையை சுற்றியுள்ள பல்வேறு சாலைகளையும் போலீசார் சீன் வைத்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பேருந்து களிலும், வெகுதூரம் நடந்தும் வெள்ளை மாளிகைமுன்பாக திரண்டனர்.குழந்தைகளை கொல்வது போர் குற்றம் , இஸ்ரேல் நடத்துவது இனப்டுகொலை, பாலஸ்தீனத்தை விடுவி, இஸ்ரேலுக்கு உதவுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும்.

இதனையடுத்து வெள்ளை மாளிகை முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago