முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மென்பொருள் ஏற்றுமதி உயர்ந்துள்ளது: அமைச்சர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 5 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக6தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலம், மென்பொருள் ஏற்றுமதி ரூபாய் 66, 024 கோடியாக, உயர்ந்துள்ளது என்றுஅமைச்சர் முர்கூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சட்டபேரவையில் மானியக்கோரிக்கையின்போது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முர்கூர் சுப்பிரமணியன் அறிவித்ததாவது:-

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலம், மென்பொருள் ஏற்றுமதி ரூபாய் 66, 024 கோடியாக, உயர்ந்துள்ளது

தகவல் தொழில்நுட்பவியல் துறை வருவாய் கணக்கில் 137 கோடியே, 74 லட்சத்து, 16 ஆயிரம் ரூபாய், மூலதன கணக்கில் ரூபாய் 1000 மற்றும் கடன் கணக்கில் ரூபாய் 2 ஆயிரம் ஆகியவற்றுக்கு மேற்படாத தொகைகள் அரசுக்கு வழங்கப்பெற வேண்டுமெனக் கோருகிறேன்.

அறிவியல் தேவைகளை நம் அன்றாட வாழ்வில் அனைவரும் எளிதில் பெறும் வண்ணம் தகவல் தொழில் நுட்ப வரலாற்றில், தமிழ்நாட்டை, இந்தியாவிற்கே முன்னோடியாக்கியவர், முதலமைச்சர்.

உலகளவில் மென்பொருள் துறையில், கடந்த ஆண்டு மந்த நிலை இருந்தும்கூட, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதயதெய்வம், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில், தமிழகத்தில் மென்பொருள் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியுள்ளது.

2012 - 13 ஆம் ஆண்டில், மென்பொருள் ஏற்றுமதி, ரூபாய் 50 ஆயிரம் கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதை மிஞ்சும் வகையில், முதல்வர் ஜெயலலிதா சீரிய தலைமையின் கீழ், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலம், மென்பொருள் ஏற்றுமதி ரூபாய் 66, 024 கோடியாக, உயர்ந்துள்ளது .

மேலும், தற்போது 2013 - 14 ஆம் ஆண்டில், மென்பொருள் ஏற்றுமதியின் மதிப்பு சுமார் 75,000 கோடி ரூபாயாக, உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பதை இம்மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக அரசினால், இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956ன் கீழ் 21-3-1977 ஆம் ஆண்டு, தமிழகத்தில் மின்னணுத் தொழில் மேம்பாட்டிற்காக, ரூபாய் 25 கோடியே 93 லட்சம் மூலதனத்துடன் தொடங்கப்பட்ட தமிழ்நாடு மின்னணு நிறுவனம்,

இந்தியாவில் ஏற்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் விளைவாக, நாளடைவில் தகவல் தொழில்நுட்பவியல் சேவை மையமாக வளர்ந்து, தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டில் ஒரு அங்கமாகவும் விளங்கி வருகிறது.

எல்காட் நிறுவனத்தின் செயலாக்கத்திறனைப் பொறுத்தவரை, 2010 - 11ஆம் நிதி ஆண்டில், 41 கோடியே 39 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் ஆக இருந்த இந்நிறுவனத்தின் வருவாய்,· 2013-14 ஆம் நிதி ஆண்டில், 51 கோடியே 43 லட்சத்து 52ஆயிரம் ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. மேலும், 2010 - 11 ஆம் நிதி ஆண்டில், 3 கோடியே 28 லட்சம் ரூபாய் ஆக இருந்த, இந்நிறுவனத்தின் நிகர லாபம், · 2013 - 14 ஆம் நிதி ஆண்டில், 16 கோடியே46 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் ஆக உயர்ந்துள்ளது என்பதை இம்மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு மின்னணு நிறுவனம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் சார்ந்த தொழில்கள், தமிழ்நாடு முழுவதும் பரவி வளர, சென்னை உட்பட எட்டு இடங்களில், தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலங்களை (எல்கோசெஸ்) அமைத்துள்ளது. இந்த எட்டு எல்கோசெஸ்களுக்கு மொத்தம் 1367.16-ஏக்கர் நிலம், தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

இதில், மீதமுள்ள 458.71 ஏக்கர் நிலம், தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ய தயார் நிலையில் உள்ளது. மேலும், இந்த 8 எல்கோசெஸ்களில், 32 தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் 38,000 நபர்கள் நேரடியாகவும், 76,000 நபர்கள் மறைமுகமாகவும், பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும், வரும்காலங்களில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில், இந்த எல்கோசெஸ்களில் வேலைவாய்ப்பு இருமடங்காக உயரும் என்பதை இம்மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்காட் நிறுவனம், தனது நிர்வாக கட்டிடங்களை, தலா 50,000 சதுரடி வீதம்,

· திருச்சி, மதுரை - இலந்தைகுளம், மற்றும் திருநெல்வேலி ஆகிய 3 இடங்களில் அமைத்து உள்ளது. இந்த மூன்று இடங்களில், இதுவரை 65,000 சதுர பரப்பளவில், 8 நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் மூலம்,

2,000 நபர்கள், நேரடியாகவும், 4,000 நபர்கள் மறைமுகமாகவும், வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர் என்பதை, மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக இம்மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு பெரும்பரப்பு வலையமைப்புதகவல் தொழில் நுட்பவியல் துறையின் வாயிலாக, அரசு துறைகளுக்கு, பல்வேறு சேவைகள் வழங்குவதற்காக, முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு மாநிலத் தரவு மையத்தினை தொடங்கினார். இதனால் மின் ஆளுமைத்திட்டம், மிகுவிரைவில் தமிழ்நாடெங்கும் பரந்து , விரிந்துள்ளது.

பல மைல் தூரம் கடந்து சென்று, கால் கடுக்க நின்று, வேலைவாய்ப்புப் பதிவு செய்ய கடினமாக இருந்த நிலையை மாற்றி, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக் கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தங்கள் பள்ளியிலேயே இணையத்தின் மூலம் பதிவுசெய்ய ஆணையிட்டதன் மூலமாக, இதுவரை 48 லட்சத்து, 45ஆயிரத்தி , 901 மாணவர்களின் வேலைவாய்ப்பு பதிவினை எளிதாக்கினார்கள், முதல்வர் ஜெயலலிதாவி ன் தற்போதைய மூன்றாண்டுகால முன்னேற்ற ஆட்சிக் காலத்தில்தான், முதன்முதலில் தகவல் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் அரசு மைய இயக்கங்கள் ஆகியவற்றுக்கான ஐ.எஸ்.ஓ மற்றும் ஐ.ஈ.சி தரச் சான்றிதழ்களைப் பெற்று சரித்திரம் படைத்தவர், முதல்வர் ஜெயலலிதா என்பதை இம்மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு

தகவல் தொழில் நுட்ப உட்கட்டமைப்பில், தரவு மையம், கணினி இணையம்,

தரவு மேலாண்மை சாதனங்கள்

ஆகியவை உள்ளடங்கி உள்ளன.

தமிழ்நாடு பெரும்பரப்பு வலையமைப்புஅனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள்வட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள்

ஆகியவை, வினாடிக்கு 2 மெகாபைட்டில் இருந்து8 மெகாபைட் வரையிலான, அலைக்கற்றை கொண்ட மிகுந்த பாதுகாப்புடைய தமிழ்நாடு பெரும்பரப்பு வலையமைப்பு மூலம் இணைக்கப்பட்டு உள்ளது.

மேலும், ரூபாய் 181.69 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டம், மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான பகிர்வுத் திட்டமாகும்.

1-12-2007 முதல் 30-11-2012 வரை, இவ்வலையத்தின் முதல் கட்ட பூட் செயற்பாடுகள், கட்டமைத்து முடிந்துவிட்டன. இதன் இரண்டாம் கட்ட இயக்கம் மற்றும் நிர்வாகம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, தமிழ்நாடு மாநில பெரும்பரப்பு வலையமைப்பு, 9-9-2013 அன்று முதல் செயற்பாட்டில் உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக அரசின் கீழ் இயங்கும், 1935க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களுக்கு, தமிழ்நாடு பெரும்பரப்பு வலையமைப்பின் இருப்பு முனைகள், கடை நிலை இணைப்பு வாயிலாக கொடுக்கப்பட்டு வருகிறது .

அகன்ற அலைவரிசை என்பது, ஓரே நேரத்தில், அதிவேகத்தில், அதிக அளவிலான தரவுகளை பரிமாறிக் கொள்ள உதவும் இணைப்பான் ஆகும். இதுவரை அரசு பள்ளிகள் உட்பட, சுமார் 25,000 அரசு அலுவலகங்களுக்கு, இந்த அகன்ற அலைவரிசை இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது என்பதை இம்மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்படும் செங்குத்து இணைப்பானது, பி.எஸ்.என்.எல் நிறுவனம் வழங்கும் அலைவரிசை வாயிலாக வழங்கப்படுகிறது.

இந்த இணைப்பு துண்டிக்கப் படுகையில், அதன் மூலம் இணைக்கப்பட்டுள்ள இருப்பு முனைகள் அனைத்தும் பாதிக்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, செங்குத்து இணைப்பினை பலப்படுத்தவும், தடையற்ற இணைப்பினை அரசு அலுவலகங்களுக்கு வழங்கவும், பதிலி இணைப்பாக, வினாடிக்கு 2 மெகாபைட் வேகத்தில், ஆஞடுளு - ஏஞசூ (1:1) இணைப்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்பொழுது தமிழ்நாடு சுகாதாரத் திட்டம், சென்னை மெட்ரோ ரயில் திட்டம்,மாநில தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திட்டம், தமிழக அரசின் விலையில்லா மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் மற்றும் மடிக்கணினி திட்டம், ஆகிய அரசு துறைகளின் மின்னணு வழி பயன்பாடுகள் மற்றும் கோப்பு செயற்பாடுகள் போன்ற பல்வேறு சேவைகள் 1-8-2011 முதல், எல்காட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள, தமிழ்நாடு மாநில தரவு மையத்தின் வழியாக செயல்படுத்தப் படுகின்றன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநில தரவு மையத்தில், அரசுத் துறைகள், தங்கள் பயன்பாட்டு மென்பொருளை ஏற்றம் செய்வதற்கு முன், அந்த மென்பொருளை, நடுநிலைமை , ஃபயர்வால் ஆன்டி வைரஸ்;பாதிப்பு மதிப்பீடு

ஊடுருவல் மதிப்பீடு போன்ற சோதனைகளுக்கு உட்படுத்த உதவும் பொருட்டு,

அரசுத் துறைகளின் வன்பொருள், மென்பொருள் மற்றும் சோதனை கருவிகளை கொண்ட ‘கணினி சர்வர் பண்ணை' ஒன்று, மாநில தரவு மையத்தில் அமைக்கப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசிய அறிவுத்திறன் வலையமைப்பு என்பது, இந்தியா முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்களை, இணையத்துடனும், உலக அறிவியல் சமூகத்துடனும் இணைக்க, மத்திய அரசால் நிறுவப்பட்ட தேசிய அளவிலான மிகு வேக இணைய வலையமைப்பு ஆகும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களால், 15-10-2012 அன்று காணொலி கலந்தாய்வின் வழியாக,

தமிழ்நாடு பெரும்பரப்பு வலையமைப்பு மற்றும் தமிழ்நாடு மாநில தரவு மையம் ஆகியவற்றை தேசிய அறிவுத்திறன் வலையமைப்புடன் ஒருங்கிணைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் ஜெயலலிதாவின் , தொலைநோக்கு சிந்தனையை, நிறைவேற்றும் பொருட்டு, தகவல் தொழில் நுட்பம் வாயிலாக , அனைத்து துறைகளிலும், அரசைத் தேடி மக்கள் என்கிற நிலையை மாற்றி, மக்களை தேடி அரசு என்கிற நிலையை உருவாக்கி, தகவல் தொழில்நுட்பத்தில் உச்சகட்ட எழுச்சியை ஏற்படுத்தியவர், முதல்வர் ஜெயலலிதா.

மின் ஆளுகையில், சிறந்த சேவைக்காக, 2012 ஆம் ஆண்டிற்கான, மத்திய அரசின் வெப்ரத்னா விருது பெற்றுத் தந்தவர்,முதல்வர் ஜெயலலிதா.

கிராமப்புற, பொதுச்சேவை மையங்கள் அமைத்து, குக்கிராமங்கள் எங்கும், அரசின் திட்டங்கள் சென்றடையும் வகையில், ரூபாய் 10 கோடி ஒதுக்கி , தகவல் தொழில்நுட்பத்தை அனைவருக்கும் பயன்படச் செய்தவர், முதல்வர் ஜெயலலிதா என்பதை இம்மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிக்கோள், திட்டங்கள் உள்ளிட்ட, மத்திய மற்றும் மாநில அளவிலான திட்டங்களின் மின்னணு பரிமாற்ற புள்ளி விவரங்களின் பரவலுக்கான ஒரு இணைய சேவை தளமே, இ - தால் எனப்படும். கிட்டத்தட்ட நிகழ் நேர அடிப்படையில், அவ்வப்போது இணைய வாயிலான செயல்பாடுகளின் பரிமாற்றம் குறித்த புள்ளி விவரங்களை இ-தால் பெறுகிறது. மேற்படி புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு, மாநிலங்கள் / திட்டங்கள் ஆகியவை தேசிய அளவில், தரவரிசை செய்யப்படுகின்றன.

முதல்வர் ஜெயலலிதாவின் அரசு, பல்வேறு அரசு துறைகளின் ஒருங்கிணைப்புடனும்,

தமிழ்நாடு மின்னாளுமை முகமை எடுத்த தொடர் முயற்சிகளின் பயனாகவும்,மாநில அரசு திட்டங்களைப் பொறுத்தவரையில், மின்னணு பரிமாற்றங்களில், இந்தியாவிலேயே, தமிழகம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது என்பதை இம்மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசிய மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ், அரசு சேவைகளை, பொது சேவை மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு, தங்கள் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே திறம்படவும், வெளிப்படையாகவும்,

குறைந்த செலவிலும், வழங்கும் நோக்கத்துடன் இம்முகமை செயல்படுகிறது.

மின் மாவட்டத் திட்டம் மற்றும் பொதுச் சேவை மையங்கள் ஆகியவற்றை

மாநிலம் முழுவதும் விரிவு படுத்துதல், திறன் மேம்பாடு மற்றும் பயிற்சிகள், தமிழ்நாடு புவிசார் தகவல் அமைப்பு, மாநில சேவை இணைய தளம் உருவாக்குதல்போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மின்மாவட்டத் திட்டமானது, மாவட்ட அளவிலான அரசு சேவைகளை, பொதுச்சேவை மையங்கள் மூலம், பொதுமக்களுக்கு வழங்கிட ஏதுவான திட்டமாகும்.

இத்திட்டத்தின்படி, முதல் கட்டமாக கிருஷ்ணகிரி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில், முழுமையாக செயல்படுத்தப்பட்டு, ஏனைய 25 மாவட்டங்களில், பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், இத்திட்டத்தின் கீழ், மேற்கண்ட 7 மின்மாவட்டங்களில், 1. பட்டதாரி இல்லை எனும் சான்று

2. கணவனால் கைவிடப்பட்டவர் என்ற சான்று3. வருவாய் சான்று

4. சாதிச் சான்று5. இருப்பிடச் சான்று, போன்ற வருவாய்த் துறை சான்றுகள், தகவல் தொழில் நுட்பவியல் துறையின்கீழ் இயங்கும், பொதுச் சேவை மையங்கள் வாயிலாக, வழங்கப்படுகின்றன.

மேலும், சமூகநலம், பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர், மற்றும் ஆதிதிராவிடர் நலம் போன்ற பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன என்பதை இம்மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்து மாவட்டங்களிலும் மின்மாவட்டத் திட்ட சேவைகள் மற்றும் இதர சேவைகளை மேற்பார்வையிட, மாவட்டந்தோறும் மின் ஆளுமை சங்கங்களை அமைத்திட முதல்வர் ஜெயலலிதாவின் அரசால், ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட மின் ஆளுமைச் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாவட்ட மின் ஆளுமைச் சங்கமும், (சென்னை மாவட்டத்தை தவிர) அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் இயங்கும்.

சென்னையைப் பொறுத்தவரையில், சென்னை மாநகராட்சி ஆணையரின் தலைமையில் இச்சங்கம் இயங்கும்.

மேலும், மாவட்டங்களில் நிறைவேற்றப்படவேண்டிய மின் ஆளுமைத் திட்டங்களுக்கான பொறுப்பு, மாவட்ட மின் ஆளுமைச் சங்கங்களைச் சாறும்.

மாவட்டத்தில் உள்ள மின் ஆளுமைத் திட்டங்களை நடைமுறை படுத்துவதிலும், அவற்றை சரிவரப் பராமரிப்பதிலும், இச்சங்கத்தின் உறுப்பினர்கள் முக்கியப் பொறுப்பு வகிப்பார்கள்.

மின் ஆளுமை சங்கங்கள் நல்ல முறையில் இயங்கிட ஏதுவாக, முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு, 10 இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி வருகிறது என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக இம்மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்பொழுது, பொதுச்சேவை மையங்கள், பள்ளிக்கூடங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளிட்ட, சுமார் 1,572 பொது சேவை மையங்கள் மூலம், அரசு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

மேலும், இதனை விரிவுபடுத்தி, கூடுதலாக 2,280 பொதுச் சேவை மையங்கள் அமைத்திட மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு திட்டமிட்டு உள்ளது. இவற்றில் 1,930 பொதுச்சேவை மையங்களை அமைப்பதற்கு, கடித ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்பதை இம்மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் ஜெயலலிதா, சென்னை மாநகராட்சியில், நகர்ப்புற பொதுச் சேவை மையங்களை அமைப்பதன் முன்னோடித் திட்டமாக, கடந்த 24-2-2014 அன்று,

மூன்று வட்டாட்சியர் அலுவலகங்கள்,

மூன்று சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள் ,

இரண்டு சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம் ,

ஆறு நகர்ப்புற கூட்டுறவு நாணய சங்கங்கள் என மொத்தம் 14 இடங்களில், நகர்ப்புற பொதுச் சேவை மையங்களை தொடங்கி வைத்தார்கள்.

மேலும், இதன் இரண்டாவது கட்டமாக, மாநிலத்தில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகளிலும், இத்திட்டத்தினைச் செயல்படுத்திட, 300 க்கும் மேற்பட்ட மையங்களை அமைத்திட, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தகவல் தொழில் நுட்பவியல் துறையின்கீழ் இயங்கும், பொதுச்சேவை மையங்கள் வாயிலாக, 31-7-2014 வரை, வருவாய்த்துறை சேவைகள் மூலமாக,

21லட்சத்து89ஆயிரத்து746 பரிவர்த்தனைகளும்,சமூகநலத்துறை சேவைகள் மூலமாக,

46 ஆயிரத்து 681 பரிவர்த்தனைகளும்,இதர சேவைகள் மூலமாக 384 பரிவர்த்தனைகளும், ஆக மொத்தம்

22 லட்சத்து 36 ஆயிரத்து 811 பரிவர்த்தனைகள் நடைபெற்று உள்ளன, என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

உழைத்துக் களைத்த மக்களின் உள்ளத்தில் களைப்பை போக்கிட, உசாகம் பெருக்கெடுத்திட , எளிய செலவில் , எங்கும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேவையை அள்ளி வழங்கியவர் முதல்வர் ஜெயலலிதா. அனைத்து ஏழை எளிய மக்களும், குறைந்த கட்டணத்தில் கேபிள் டி.வி. சேவைகளை பெறும் வகையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேவையை தமிழ்நாடு முதலமைச்சர் முதல்வர் ஜெயலலிதா

2001 - 2006 ஆம் ஆட்சிக் காலத்தில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சட்ட முன்வடிவு எண் 6/2006, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 27-1-2006ஆம் நாளன்று நிறைவேற்றப்பட்டு, அப்பொழுதே மேதகு ஆளுநர் அவர்களின் இசைவிற்காக அனுப்பப்பட்டது.

அப்பொழுது மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த கருணாநிதி, நாட்டின் நலனுக்கும், மக்களின் நல்வாழ்வுக்கும், ஆளுநரை சந்திக்காத அவர், பதறிப்போய், குடும்பத் தொலைக்காட்சியை காப்பாற்றுவதற்காக, ஆளுநரை சந்தித்து, கேபிள் டிவி சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாமென மன்றாடி, முறையிட்டதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு, மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி வந்தவுடன், மேற்படி சட்ட முன் வடிவு திரும்பப் பெறப்பட்டது.

முந்தைய மைனாரிட்டி திமுக அரசின், முதல்வராக பதவி வகித்த, கருணாநிதி மற்றும் அவருடைய பேரன் கலாநிதி மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர்களின் குடும்ப தொலைக்காட்சி மூலமாக,

சுமார் 2 கோடி சந்தாதாரர்களிடம் இருந்து, ரூபாய் 150 முதல் 250 வரை வசூல் செய்து, மாதம் ஒன்றிற்கு ரூபாய் 500 கோடி வரை பொதுமக்கள் பணத்தை சுருட்டியதை தடுக்கும் பொருட்டு,

எப்பொழுதும் மக்களின் நலனையே சிந்தித்துக் கொண்டிருக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையிலும், அரசு கேபிள் டிவி நிறுவனம், தனது சேவையினை, மாதம் ரூபாய் 70/- என்ற மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்க உத்தரவிட்டார்கள் என்பதைதெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மூன்றாவது முறை ஆட்சி பொறுப்பேற்றவுடன்,

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு, ரூபாய் 3 கோடி நிதியுதவி கடனாக வழங்கி, புனரமைக்கப்பட்டு, 2-9-2011 நாளன்று முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திருக்கரங்களால் தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், கடைநிலை கேபிள் டிவி ஆப்பரேட்டர்களின் வேலைவாய்ப்பு பாதிக்காத வண்ணம், தமிழகம் முழுவதும் ஒளிபரப்புச் சேவையை சிறப்பாக வழங்கி வருகிறது என்பதை இம்மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

2.9.2011 அன்று 4 இலட்சத்து 94 ஆயிரமாக இருந்த இந்நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் இடைவிடாத முயற்சிகளின் காரணமாக, தற்பொழுது

70 இலட்சத்து 52 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

மேலும், இந்நிறுவனத்தின் இணைப்பு பெற்றுள்ள ஆப்பரேட்டர்களின் எண்ணிக்கை 26,246 என உயர்ந்து உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கடின உழைப்பாலும், சிறந்த நிர்வாகத் திறமையாலும், அரசு கேபிள் டிவி நிறுவனத்தை, முழு முனைப்புடன் முடிக்கிவிட்ட காரணத்தினாலும், அம்மாவின் உயரிய மதி நுட்பத்தாலும், 2012-13 நிதியாண்டில், ரூபாய் 5 கோடியே, 10 லட்சம் இலாபமும், 2013 -14 ஆம் நிதியாண்டில்

ஞீ ரூபாய் 12 கோடியே, 2 லட்சம் இலாபமும், அரசு கேபிள் டிவி ஈட்டியுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னையில் டிஜிட்டல் கேபிள் டிவி சேவையை வழங்க, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டு, முதற்கட்டமாக 50,000 செட்-டாப் பாக்ஸ்கள் வாங்கப்பட்டு, அதில் 20,000 செட்-டாப் பாக்ஸ்கள், 350 கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

மேலும், சென்னை மாநகரைப் பொறுத்தவரை, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தெளிவுடனும், தரமுடனும் 90 முதல் 100 சேனல்கள் வரை, கேபிள் ஆபரேட்டர்கள் மூலம், மாதம் ஒன்றுக்கு, ரூபாய் 70/- என்ற மிகக் குறைந்த கட்டணத்தில், அனலாக் மற்றும் டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பு செய்து வருகிறது.

தற்பொழுது, சென்னை மாநகரில் 820 ஆப்பரேட்டர்கள், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேவையினை பெற்று, 3,40,000 சந்தாதாரர்களுக்கு அளித்து வருகிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு, மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், தனது குறிப்பு எண்.9/32/2007, நாள் 2-4-2008-ன்படி சி.ஏ.எஸ். பகுதிகளுக்கு, எம்.எஸ்.ஓ உரிமம் வழங்கியுள்ளது.

மத்திய அரசின் கேபிள் டிவி நெட்வொர்க் திருத்தச் சட்டம், 2011-ன்படி நாடு முழுவதும் 31-12-2014க்குள், டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் டிஜிட்டல் மயமாக்கலுக்கு தேவையான, டிஜிட்டல் உரிமம் வழங்கக் கோரி, மத்திய அரசுக்கு 5-7-2012 மற்றும் 23-11-2012 ஆகிய தினங்களில் விண்ணப்பித்து இருந்தது.

மேலும், தேசிய வளர்ச்சி குழும கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா அவர்கள், தமிழக மக்களின் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பிய போது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவிக்கு, டிஜிட்டல் உரிமம் வழங்கவும் வலியுறுத்தினார்கள்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், டிஜிட்டல் உரிமம் வழங்கக் கோரி உயர்நீதிமன்றத்தை அணுகியது. உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்குமாறு 6-12-2012 அன்று, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்திற்கு இடைக்கால தீர்ப்பு வழங்கியது.ஆனால், டிஜிட்டல் உரிமம், மைய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திடம் இன்றுவரை, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளது.

தற்போது, இப்பொருள் குறித்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை, 3-6-2014 அன்று புதுடெல்லியில் நேரில் சந்தித்து, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்க கீழ்க்கண்ட கோரிக்கை வைத்தார்கள்.

தமிழ்நாடு அரசு, கேபிள் டிவி நிறுவனத்தை, தமிழ்நாடு அரசு மீட்டெடுத்து, தமிழ்நாட்டில் கேபிள் டிவி சேவையை வழங்கி வருகிறது எனவும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், டிஜிட்டல் உரிமம் வழங்க வேண்டி மத்திய அரசுக்கு 5-7-2012 மற்றும் 23-11-2012 ஆகிய தினங்களில் விண்ணப்பித்திருந்தது எனவும்,

இந்த விண்ணப்பங்கள், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திடம் இன்னும் நிலுவையில் உள்ளது எனவும், குறிப்பிட்ட தனியாரின் வணிகத்திற்கு உதவும் நோக்குடன், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மாநில அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமத்தை வேண்டுமென்றே வழங்கவில்லை எனவும்,

எனவே, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு, டிஜிட்டல் உரிமத்தை வழங்க, மத்திய அரசு விரைந்து தீர்வு காண வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்கள்"" முதல்வர் ஜெயலலிதாவின் அவர்கள், என்பதை இம்மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர். பேசினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்