முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கடற்படையால் மீனவர்கள் விரட்டியடிப்பு

செவ்வாய்க்கிழமை, 5 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

மணமேல்குடி, ஆக.06 - புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டினத்தில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை 180 படகுகளில் சுமார் 700 மீவர்கள் கடலுக்கு சென்றனர். ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த ராஜேந்திரன், மோகன், ராமையா ஆகியோருக்கு சொந்தமான 3 படகுகளில் சென்ற கதிரவன் (43), நேரஷ் (30), மூர்த்தி (50), பாலமுருகன் (30), ராம்கிளிப் (20) உள்பட 12பேர் இந்திய கடல் எல்லையில் 17வது நாட்டிக்கல் மைலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

நேற்று அதிகாலை 3 மணிக்கு திடீரென 2 படகுகளில் இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர். அவர்கள் ஜெகதாப்படினம், மீனவர்கள் படகு அருகே வந்து இது எங்கள் எல்லை, இங்கே மீன்பிடித்தால் தாக்குவோம் ஓடிவிடுங்கள் என மிரட்டி விட்டு சென்றனர்.

இதனால் பயந்து போன மீனவர்கள் மேலும், இந்திய எல்லைக்குள் வந்தனர். அப்போது, இன்னொரு படகில் வந்த இலங்கை கடற்படையினர் வந்தனர். தங்கள் படகால், ராமையனுக்கு சொந்தமான படகு மீது மோதினர். இதனால் மேலும் பயந்து போன மீனவர்கள் படகை வேகமாக ஓட்டி வந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் 3 படகுகளின் மீதும் சரமாரியாக கல் வீசி தாக்கினர். இதில் படகுகளின் கண்ணாடிகள் உடைந்து போனது. 3 படகுகளும் நேற்று காலை 8 மணிக்கு கரை திரும்பியது. மீனவர் சங்க தலைவர் குட்டியாண்டி, இதுகுறித்து போலீசாருக்கும், மீன்வளத்துறைக்கும் தகவல் தெரிவித்தார்.

ஜெகதாப்பட்டினம் மீனவர் ராம்கிளிப் கூறுகையில், இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவதால் தமிழக மீனவர்கள் யாரும் எல்லை தாண்டுவது இல்லை. இந்திய எல்லைக்குள்ளேயே மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் வந்து தங்களின் படகை எங்கள் படகில் மோதினர். இதனால் படகு உடைந்து விடுமோ என்று பயந்தோம், அதிர்ஷ்டவசமாக படகு உடையவில்லை. ஆனால், இலங்கை ராணுவத்தினர் சரமாரி கல்வீசி தாக்கினர். நாங்கள் வேகமாக திரும்பியதால் தப்பினோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்